தி.மு.க

குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி தமிழகத்தை வளமாக்கிய கலைஞர் : மகுடம் சூடிய திமுக-14

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கலைஞர் அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.

குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி தமிழகத்தை வளமாக்கிய கலைஞர் : மகுடம் சூடிய திமுக-14
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஒரு தன்னாட்சி அமைப்பாக 14.04.1971 அன்று ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட ஆவன செய்யப்பட்டது. 1966ம் ஆண்டு 920 ஆக இருந்த குடிநீர் கிணறுகளின் எண்ணிக்கை தி.மு.க ஆட்சியில் 1975 ஆண்டு 42,000 ஆக உயர்த்து. 1971 முதல் 1976 வரை தி.மு.க ஆட்சி காலத்தில் குடிநீர் திட்டங்களுக்கு ரூ.53 கோடி ஒதுக்கப்பட்டது.

1996 ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகளின் எண்ணிக்கை 17,501 தான். ஆனால் 1996-2001 வரையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில் 24,793 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. 1996-2001 தி.மு.க ஆட்சியில் 33,576 அடிகுழாய் பம்புகள் அமைக்கப்பட்டன. 1996-2001 தி.மு.க ஆட்சியில் ஊரக குடிநீர் திட்டங்களுக்கு ரூ.1,503 கோடியே 79 இலட்சம் ஒதுக்கப்பட்டது. 2000-2001 ஆம் ஆண்டு பல புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு ஊரகப் பகுதிகளில் 46,000 வீட்டு குடிநீர் இணைப்பு வசதிகள் தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்காலத்தில் செய்து கொடுக்கப்பட்டன. அதுவரை நகர்ப் பகுதிகளில் மட்டுமே இருந்துவந்த குடிநீர் இணைப்பு வசதிகள் தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஊரகப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்பட்டன. 1996-2001 தி.மு.க ஆட்சி காலத்தில் ரூ.1,213 கோடியே 96 லட்சம் செலவில் முழுமையான குடிநீர் வசதிகள் கிராமங்களில் செய்து கொடுக்கப்பட்டன.

குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி தமிழகத்தை வளமாக்கிய கலைஞர் : மகுடம் சூடிய திமுக-14

இந்திய துணைக் கண்டத்திலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர் வழங்கும் திட்டம் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் லிருந்து 55 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. ரூ.132 கோடி மதிப்பீட்டில் 1.788 ஊராட்சிகளில் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரூ.250 கோடி செலவில் வேலூர் பகுதியில் 8.517 பஞ்சாயத்துகளில் கோடியில் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. வேலூர் மற்றும் பல உள்ளாட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் தி.மு.க ஆட்சியில் ரூபாய் 1,400 கோடி செலவில் வேலூரில் துவக்கி வைக்கப்பட்டது.திருநெல்வேலி மாவட்டத்தில் 6 கோடி ரூபாய் செலவில் பாளையங்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெருங்குளம் ஊராட்சியில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

1996-2001 தி.மு.க ஆட்சிக் காலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் ரூ.47 கோடி ரூபாய் செலவில் 1050 ஊரக குடியிருப்புகளைச் சார்ந்த 19 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் மேலூர் பேரூராட்சி குடிநீர் திட்டம் ரூ.291 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டது. சேலத்தில் ரூபாய் 978 கோடி செலவில் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தி.மு.க ஆட்சியில் கோவையில் சிறுவாணி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல், கோவை, திருப்பூர், கரூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. 2011ஆம் ஆண்டு சென்னை நகரில் புதிதாக 2 லட்சத்து 37 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் : சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டது. துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிலையத்தின் கட்டுமானப் பணியை 23-2-2010 துவக்கி வைத்தார். சென்னை மாநகர குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வட சென்னை மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 25-7-2010 நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணா நதி நீர் திட்டம் : ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கிருஷ்ணா நதி நீரை பெறுவதற்கான திட்டம் நிறைவேற்றப்பட்டது. 1996 ஆம் ஆண்டில் 70 மில்லியன் கனஅடியும். 1997 ஆம் ஆண்டில் 2,417 மில்லியன் கனஅடியும், 1998 ஆம் ஆண்டில் 2,806 கன அடியும், 1999ஆம் ஆண்டில் 1,833 மில்லியன் கனஅடியும், பூண்டி நீர்த்தேக்கத்திற்க்கு கிருஷ்ணா நதியிலிருந்து தண்ணீர் கிடைக்கப்பெற்றது.

குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி தமிழகத்தை வளமாக்கிய கலைஞர் : மகுடம் சூடிய திமுக-14

கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட தண்ணீரை சுத்திகரிப்பதற்காக சென்னை அருகில் உள்ள செம்பரம்பாக்கத்தில் ரூபாய் 276 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்து 19-7-2007 அன்று அத்திட்டத்தை முதலமைச்சர் கலைஞர் துவங்கி வைத்தார்.

இந்தியாவில் உள்ள மற்ற பெருநகரங்களோடு ஒப்பிடும்போது குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் ஆகிய பணிகளில் சென்னை பெருநகரம் இந்தியாவிலேயே முதல் இடத்தை வகித்து பாராட்டு பெற்றது. உலக வங்கி குழுவினர் 1999ஆம் ஆண்டு சென்னை பெருநகருக்கு வந்து ஆய்வு செய்து இங்கு அமைந்துள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வசதிகள் தெற்காசியாவிலேயே மிகச்சிறப்பாக உள்ளதாக பாராட்டு தெரிவித்தனர்.

சென்னையில் வேளச்சேரி, கொளத்தூர், கொடுங்கையூர், சாலிகிராமம், விருகம்பாக்கம் பகுதிகளில் குழாய் மூலமாக குடிநீர் விநியோகிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து போரூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல இரு ஏரிகளையும் இணைக்கும் 11 கிலோ மீட்டர் நீளமுள்ள தந்திக்கல் கால்வாய் தூர்வாரும் பணி 23-12-1999 பொதுப்பணித்துறை மூலமாக முடிக்கப்பட்டது. 1996-2001 தி.மு.க ஆட்சியில் சென்னை பெருநகரில் குடிநீர் வசதி இல்லாத பகுதிகள் அனைத்திற்கும் குடிநீர் குழாய்கள் அமைத்து தரப்பட்டன. ஈக்காட்டுத்தாங்கல் போன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன. சென்னையை அடுத்துள்ள நகர பகுதிகளான மாதவரம், அம்பத்தூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளிலும் பம்மல், அனகாபுத்தூர், மீனம்பாக்கம், சிட்லபாக்கம், உள்ளகரம்-புழுதிவாக்கம், வளசரவாக்கம், மதுரவாயில், போரூர் பேரூராட்சிகளிலும் பரங்கிமலை, பொழிச்சலூர் போன்ற ஊராட்சி பகுதிகளிலும் மேல்நிலை நீர்த்தொட்டிகள் கட்டப்பட்டன. இதன் மூலம் பல லட்சம் மக்கள் குடிநீர் வசதி பெற்றனர்.

சென்னை குடிநீர் இரண்டாவது திட்டத்தின் கீழ் பல பகுதிகளுக்கு குடிநீர் வசதிகள் விரிவாக்கம் செய்துதரப்பட்டன. பஞ்சட்டி, மீஞ்சூர் போன்ற பகுதிகளில் உள்ள பெரிய ஆழ்துளை கிணறுகள் சீர்படுத்தப்பட்டு சென்னை நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. சென்னை நகருக்குள் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தின் கிணறுகளிலிருந்து நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம் : உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது பெருமுயற்சியால் தயாரான ஆசியாவிலேயே மிகப்பெரிய கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் 27-6-1999 அன்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 30-1-2007 அன்று அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணிகள் முடிந்து 11- 6-2009 அன்று முதல் கலைஞர் அவர்கள் இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். ரூபாய் 616 கோடி செலவில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 3163 ஊரக குடியிருப்புகளுக்கு சார்ந்த 20 இலட்சம் மக்கள் குடிநீர் வசதி பெற்றனர்.

குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி தமிழகத்தை வளமாக்கிய கலைஞர் : மகுடம் சூடிய திமுக-14

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் : 2006-2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஜப்பான் நாட்டுக்கு சென்று உரிய பேச்சுவார்த்தை நடத்தி 1,928 கோடி ரூபாய் நிதி பெற்று அந்த நிதியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 2-2-2008 அன்று அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் மூலம் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1755 ஊரக குடியிருப்புகள் இத்திட்டத்தின் மூலமாக பயன் பெற்றனர். இத்திட்டத்தின் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில் தி.மு.க ஆட்சி காலம் முடிவுற்ற அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க ஆட்சியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தாமிரபரணி கூட்டுத் குடிநீர் திட்டம் ரூபாய் 597 கோடி செலவில் உள்ளாட்சித் துறை அமைச்சரும் துணை முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டம், செஞ்சி கூட்டு குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டன. இரண்டாம் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. உதகையில் மூன்றாவது குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பஞ்சப்பள்ளி அணையிலிருந்து பாலக்கோடு மாரண்டஅள்ளி பகுதி மக்கள் பயன்பெற கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டது. ரூபாய் 500 கோடி மதிப்பில் 10 ஆயிரம் கிராமங்களில் பயன்படக்கூடிய ஊர கூட்டு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ரூபாய் 400 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட ஊரக குடிநீர் திட்டங்கள் மூலமாக 24 லட்சம் மக்கள் பயன்படும்படி நடைமுறைப்படுத்தப்பட்டன. சென்னை நகரத்தில் அமைக்கப்பட்ட பல குடிநீர் குழாய்களை மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து திறந்து வைத்தார்கள்

ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப சாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டப்பணிகள். முடிக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டன. கீழ்நிலைத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டன. பெருங்குடியில் புதிய குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது. ஆவடி குடிநீர் அபிவிருத்தித் திட்டம், மதுரவாயல் குடிநீர் அபிவிருத்தித் திட்டம், போரூர் குடிநீர் அபிவிருத்தித் திட்டம், திருவெற்றியூர் குடிநீர் திட்டம் அம்பத்தூர் குடிநீர் திட்டம் என பல குடிநீர் திட்டங்கள் சென்னை மாநகர மக்களுக்காக துவக்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

- பேராசிரியர் டாக்டர் சு.கிருஷ்ணசாமி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் & உலகச் சுற்றுச்சூழல் பேரமைப்பின் முன்னாள் உறுப்பினர்.

Related Stories

Related Stories