தி.மு.க

‘தளபதி - தலைவர் - முதல்வர்’ : உடன்பிறப்புகளின் தலைவனுக்கு விழா எடுக்கும் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி!

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி சார்பில் ‘தளபதி - தலைவர் - முதல்வர்’ என்கிற தலைப்பில் உணர்வுப்பூர்வமான ஒன்றுகூடல் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படவுள்ளது.

‘தளபதி - தலைவர் - முதல்வர்’ : உடன்பிறப்புகளின் தலைவனுக்கு விழா எடுக்கும் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி சார்பில் ‘தளபதி - தலைவர் - முதல்வர்’ என்கிற தலைப்பில் உணர்வுப்பூர்வமான ஒன்றுகூடல் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், வரும் பிப்ரவரி 23 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற இருக்கிறது.

உணர்ச்சிகளால் ஆன இந்த விழாவிற்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தலைமை தாங்குகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தி.மு.கழக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., இயக்குநர் கரு.பழனியப்பன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் உணர்வு உரை ஆற்ற இருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories