தி.மு.க

“திமுக ஆட்சிக்கு வராவிடில் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்” - அதிமுக-பாஜகவை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி.!

தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பவனந்நதியார் தெரு பூங்கா அருகில் அதிமுகவை நிராகரிப்போம் திமுகவை ஆட்சியில் அமரவைப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம்நடைபெற்றது.

File Image
File Image
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எதிர்வரும் தேர்தல் யார் முதலமைச்சர் என்பதற்கான தேர்தல். தி.மு.கழக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதல்வர் என்று அனைவரும் உதயசூரியனுக்கு வாக்களிக்கவேண்டும். இதில் தவறு ஏற்பட்டால் நாடு சுடுகாடு ஆககூடிய நிலை ஏற்படும் என்று தி.மு.கழக பொருளாலர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் தொகுதி செம்பாக்கம் நகராட்சி பவனந்நதியார் தெரு பூங்கா அருகில் அதிமுகவை நிராகரிக்கிறோம், திமுகவை ஆட்சியில் அமரவைப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் 1வது வட்ட செயலாளர் ஜெயபிரதீப் சந்திரன் தலைமையில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.கழக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ, தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, ஆகியோர் கலந்து பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று கொண்டனர். பின்னர் இன்னும் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் அடைந்து கழக தலைவர் மு.க.ஸ்டாலின் முலமைச்சராக ஆட்சியில் அமர்ந்த உடன் உங்கள் பகுதி குறைகள் அனைத்தும் தீர்த்து வைக்கபடும் என்று உறுதி அளித்தார்.

மேலும் பேசிய டி.ஆர்.பாலு, எதிர்வரும் தேர்தலில் நாம் அனைவரும் செலுத்தும் வாக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்காக அல்ல, யார் முதலமைச்சர் என்பதற்கான வாக்கு, கடந்த 10 ஆண்டுகளாக பொது மக்களை நிராகரித்த இந்த அதிமுக அரசை பொது மக்கள் நிராகரிக்கவேண்டும். உங்கள் வாக்கு முதலமைச்சருக்கான வாக்கு என்பதை மறந்துவிட கூடாது. கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதலமைச்சர் என்று உதயசூரியனுக்கு வாக்களிக்கவேண்டும். இதை மறக்க கூடாது. இதில் தவறு ஏற்பட்டால் தமிழ்நாடு சுடுகாடு ஆகும் நிலைக்கு இந்த நாட்டின் நிலை மாறிவிடும் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவரும் கழக பொருளாலருமான டி.ஆர்.பாலு பேசினார்.

banner

Related Stories

Related Stories