தி.மு.க

உச்ச நீதிமன்றம் & உயர் நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் - திமுக MP பி.வில்சன் கருத்து!

ஒரு பிரிவினர் மட்டுமே நீதிபதி பணியிடங்களில் நிரப்பப்படுகிறார்கள், மற்ற பிரிவினர்களுக்கும், பெண்களுக்கும் நீதித்துறையில் நீதிபதி பணியிடங்களில் பிரதிநித்துவம் கொடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

உச்ச நீதிமன்றம் & உயர் நீதிமன்றங்களில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும் - திமுக MP பி.வில்சன் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திமுக சட்டத்துறை சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் சட்ட கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கழகக் கொடி ஏற்றி வாழ்த்துரை ஆற்றினார்.

அதன் பின்னர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தலைப்பில் உரை மூத்த வழக்கறிஞரும், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் உரையாற்றினார்.

அதில் அவர் பேசியதன் விவரம் பின்வருமாறு:-

“சாதிய அமைப்புதான் இட ஒதுக்கீட்டுக்கு காரணம். பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர்அவர்கள்தான் இட ஒதுக்கீட்டை முன்னெடுத்து சாமானிய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை பெற்று தந்தனர். உச்சநீதிமன்றத்தில் உருவாக்கப்பட்ட "ஆல் இந்திய கோட்டா" எம்பிபிஎஸ் மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்காமல் மறுக்கப்பட்ட வந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் மகத்தான தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிந்து இடஒதுக்கீடு குறித்து, உரிமையை கோரி வாதாடினோம். இதை முதன்முதலில் எடுத்து சென்றது திராவிட முன்னேற்ற கழகம் தான். ஆனால் இந்த மகத்தான தீர்ப்புக்கு மற்றவர்கள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

மத்திய மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக துணை போய் கொண்டு இருக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி காலிப்பணியிடங்கள் 34 இருக்கிறது. ஒரு பிரிவினர் மட்டுமே நீதிபதி பணியிடங்களில் நிரப்பப்படுகிறார்கள், மற்ற பிரிவினர்களுக்கும், பெண்களுக்கும் நீதித்துறையில் நீதிபதி பணியிடங்களில் பிரதிநித்துவம் கொடுக்க வேண்டுமென்பது என் கருத்து.

உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்றால் ,பல லட்சங்கள் செலவாகும். உச்ச நீதிமன்ற கிளை நாடு முழுவதும் உள்ள மண்டலங்களில் திறக்கப்பட வேண்டும். இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. ஆர்டிகல் 32 SC- Regional benches has to be implemented. இட ஒதுக்கீடு, நீதிபதிகள் நியமனம், உச்சநீதிமன்ற கிளை, சென்னையில் இந்த கிளை அமைக்கப்பட வேண்டும் என்று தன் கோரிக்கையை எடுத்துரைத்தார்.

banner

Related Stories

Related Stories