தி.மு.க

தலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள்... மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்! #Kalaignar97

முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

தலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள்... மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்! #Kalaignar97
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தலைவர் கலைஞரின் 97வது பிறந்த நாள்... மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்! #Kalaignar97

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை தி.மு.க குழு துணைத் தலைவர் கனிமொழி , இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சேகர் பாபு எம்.எல்.ஏ., மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன்பின்னர், கலைஞர் நினைவிடத்தில் தி.மு.க தொண்டர்களான அசோக் குமார், மகாலட்சுமி ஆகியோரின் திருமணத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்தினார். மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் அவர் வழங்கினார்.

banner

Related Stories

Related Stories