தி.மு.க

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க தலைவரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் இன்று மாலை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் இன்று மாலை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:

வார்டு 66 - பெரியார் நகர், திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 700 இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு பரிசுப் பொருட்களையும், நிதி உதவியையும் வழங்கினார்.

அனிதா அச்சீவர்ஸ் அகாடெமி (Anitha Achivers Academy)-யில் பயிலும் 17 இசுலாமிய மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களும், நிதி உதவியும் வழங்கினார்.

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

வார்டு 64 - மீனாட்சி நகர், எவர்வின் பள்ளியில், 700 இசுலாமிய சகோதர, சகோதரிகளுக்கு பரிசுப் பொருட்களும், நிதி உதவியும் வழங்கினார். பின்னர், கடந்த 2018ம் ஆண்டு 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற ஜாஹினா அப்ரின் என்ற மாணவிக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்படிப்பிற்கான அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, அம்மாணவியின் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை ஏற்கனவே வழங்கியிருந்தார். தற்போது மூன்றாம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை வழங்கினார்.

அடுத்ததாக, V6 காவல் நிலையத்திற்கு N95 முகக்கவசம் -25, 500ml கிருமிநாசினி - 25, 3 LAYER முகக்கவசம் - 500, சோப்பு -100 ஆகியவற்றை வழங்கினார்.

banner

Related Stories

Related Stories