தி.மு.க

“ஏனெனில், அவர் தத்துவத்தின் அடையாளம்” - மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கருத்தரங்கில் ஆ.ராசா பேச்சு! (வீடியோ)

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் பிறந்தநாள் கொண்டாடுகிறோம் என மகளிரணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனக்கே உரிய பாணியில் விவரித்துள்ளார் கழக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா.

“ஏனெனில், அவர் தத்துவத்தின் அடையாளம்” - மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கருத்தரங்கில் ஆ.ராசா பேச்சு! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கழக மகளிரணி சார்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா எம்.பி, மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., ஆளுர் ஷாநவாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கட்சியில் திறம்பட பணியாற்றிய மகளிர் அணியினரை ஊக்குவிக்கும் விதமாக காசோலைகளும் வழங்கப்பட்டன.

அதன் பிறகு ஒவ்வொருவரும், தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆளுமையை பாராட்டியும் வாழ்த்தியும் சிறப்புரையாற்றினர். அப்போது பேசிய ஆ.ராசா எம்.பி தெரிவித்தாவது,

“பொதுவாக பிறந்தநாள் தனி மனிதனுக்கான குறியீடாக இருக்கும். ஆனால், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோருக்கான பிறந்த நாளெல்லாம் ஒரு தத்துவத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

“ஏனெனில், அவர் தத்துவத்தின் அடையாளம்” - மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கருத்தரங்கில் ஆ.ராசா பேச்சு! (வீடியோ)

அரசியல் கட்சியின் தலைவராக மட்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரை சுருக்கிவிட முடியாது. திராவிட இயக்கத் தலைவர்களாக இருந்த பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரது தத்துவத்தையும், கொள்கைகளையும் காப்பாற்றக்கூடியவர் ஒருவர். அந்த தத்துவங்களெல்லாம் சரிந்தும், சாய்ந்தும் விடக்கூடாது என்பதற்காகவே தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை நாம் கொண்டாடுகிறோம்.

ஆகையாலேயே இந்தியாவில் தலைமையும், தத்துவமும் ஒருங்கே அமைந்த இயக்கமென்றால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தை தவிர வேறெதுவும் இல்லை. தி.மு.கவை வாரிசு அரசியல் கட்சி என்கிறார்கள். இதில் வாரிசுகள் மட்டும் இருந்துவிடவில்லை. ரத்தமும் சதையும் இருப்பதால் மட்டுமல்ல; லட்சிய முழக்கத்தின் காரணமாக தி.மு.கழகத்தில் தலைவர்களாக வருகிறார்கள்.

காஷ்மீர் தொட்டு இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வாரிசு அரசியலும், ஆட்சியும் நடந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் லட்சியத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி நடந்தது.

“ஏனெனில், அவர் தத்துவத்தின் அடையாளம்” - மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கருத்தரங்கில் ஆ.ராசா பேச்சு! (வீடியோ)

அதற்காகவே தலைவர் மு.க.ஸ்டாலினை கொண்டாடுகிறோம். சாதியை ஒழிக்கவேண்டும் என பெரியாரும், அண்ணாவும் கருத்து மூலம் எடுத்துரைத்துப் போராடினார்கள். ஆனால், தலைவர் கலைஞரோ ஒருபடி மேலே சென்று சமத்துவபுரம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அவருடையை சித்தாந்தத்தின் வழிவந்த தலைவர் மு.க.ஸ்டாலின் சில ஆண்டுகளுக்கு முன், சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் இந்த ஆண்டை அனைத்து தேசமும் கொண்டாடட்டும் என ஜ.நா.சபை அறிவித்ததையடுத்து, தன்னுடைய பிறந்தநாளுக்கு இரத்த தான முகாமை ஏற்படுத்தி எந்த சாதி பாகுபாடும் இல்லாமல் இரத்த தானம் செய்வோம் என்றவர்.

அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை நீங்கலாக சமதர்தம், இறையான்மை, ஜனநாயகம், ஆகியவற்றை தான் முதலமைச்சராக இருந்த சமயத்தில் கட்டிக் காத்தவர் தலைவர் கலைஞர். தற்போது மு.க.ஸ்டாலின் தலைவராக உள்ள சமயத்தில் மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது.

“ஏனெனில், அவர் தத்துவத்தின் அடையாளம்” - மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கருத்தரங்கில் ஆ.ராசா பேச்சு! (வீடியோ)

இந்த மதச்சார்பின்மைக்கு ஊறு வந்ததை அடுத்து முதல் ஆளாக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு எதிராக இரண்டு கோடி கையெழுத்தை பெற்றுத் தந்த மகத்தான தலைவர் மு.க.ஸ்டாலின்.

ஆட்சி அதிகாரங்கள் இல்லை, தீர்மானங்கள் நிறைவேற்ற முடியவில்லை. பெரியார், அண்ணா, கலைஞர் என எந்த பெரும் தலைவர்களும் இல்லாத சமயத்தில் வாலாட்டும் பா.ஜ.க இன்றைக்கும் தலைவர் மு.க.ஸ்டாலினை பார்த்து அஞ்சி நடுங்குகிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories