தி.மு.க

மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி சென்னை மூலக்கொத்தளத்திலுள்ள தியாகிகளின் நினைவிடத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி சென்னை மூலக்கொத்தளத்திலுள்ள தியாகிகளின் நினைவிடத்திற்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கழக நிர்வாகிகளுடன் பேரணியாகச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழகத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக நீண்ட நெடிய போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களில் சிலர் சிறைக் கொடுமை தாங்காமல் உயிரிழந்தனர். ஜனவரி 25 1965ம் ஆண்டு முதல் மொழிப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, சென்னை மூலக்கொத்தளத்திலுள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து நடராசன் மற்றும் தருமம்மாள் நினைவிடத்திற்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கழக நிர்வாகிகளுடன் பேரணியாகச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

அப்போது தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உடன் வடக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சுதர்சனம், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, கழக மாணவரணி செயலாளர் எழிலரசன், இளைஞரணி துணைச் செயலாளர் ஆர்.டி.சேகர், தாயகம் கவி மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories