தி.மு.க

''ஃபரூக் அப்துல்லாவை உடனடியாக விடுவிக்க வேண்டும்'' - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா மீது விதிக்கப்பட்ட பொதுப் பாதுகாப்பு சட்டம் மேலும் 3 மாதங்கள் நீட்டித்துள்ளதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

''ஃபரூக் அப்துல்லாவை உடனடியாக விடுவிக்க வேண்டும்'' - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
stalin 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தின் போது ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது மோடி அரசு.

அரசுக்கு எதிராக காஷ்மீரில் மக்களை ஒன்றிணைத்து தங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடாத வகையில் அரசியல் தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்களான மெகபூபா முஃப்தி, ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா உள்ளிட்ட பலரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பா.ஜ,க அரசு வீட்டுச் சிறையில் அடைத்து வைத்துள்ளது.

''ஃபரூக் அப்துல்லாவை உடனடியாக விடுவிக்க வேண்டும்'' - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!

இந்நிலையில், ஃபருக் அப்துல்லா மீது விதிக்கப்பட்ட பொதுப் பாதுகாப்பு சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீநகரில் உள்ள அரசு அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

இதற்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஃபரூக் அப்துல்லாவை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “82 வயதான நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சரும், மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா எந்த அடிப்படையும் இன்றி பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது நமது ஜனநாயக மரபுகளுக்கு வெட்கக்கேடானது.

நமது அரசியலமைப்புக்கு அவமரியாதை. எனவே அவரை உடனடியாக விடுவிக்கக் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories