தி.மு.க

குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஏன் எதிர்க்க வேண்டும் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்! (VIDEO)

குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஏன் எதிர்க்க வேண்டும் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்! (VIDEO)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவிற்கு தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

மேலும் அமல்படுத்தப்பட்ட இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஏன் எதிர்க்க வேண்டும் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்! (VIDEO)

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. மக்களை பிளவுபடுத்துகிற இந்தச் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க வாக்களித்தது. ஆனால், அ.தி.மு.க அதரவு தெரிவித்து வாக்களித்தது.

இந்தச் சட்டதிற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகிறது.

அகதிகளாக நமது நாட்டிற்கு வருபவர்களுக்கு வாழ்வு தரக்கூடிய உன்னதமான சட்டம் தான் குடியுரிமை சட்டம். 60 வருடங்களுக்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்தை இப்பொழுது திருத்துவதற்கு என்ன அவசரம் வந்தது.

பொருளாதார மந்தநிலை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றிலிருந்து திசைதிருப்பவே இந்த சட்டத் திருத்தத்தை கையிலெடுத்துள்ளனர். இதில், அகதிகளாக வரும் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என அறிவித்திருந்தால் நாம் இதை எதிர்க்கப்போவதில்லை. இஸ்லாமிய மக்களை மட்டும் புறக்கனிக்கிற வகையில், மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் சட்டமாக இந்த சட்டத்தை பா.ஜ.க மாற்றியுள்ளது.

குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஏன் எதிர்க்க வேண்டும் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்! (VIDEO)

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களைத் தவிர அனைவரும் இந்தியாவிற்குள் வரலாம் என இந்தச் சட்டம் சொல்கிறது. இஸ்லாமியர்கள் மட்டும் புறக்கனிக்கப் படுவது ஏன்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களைத் தவிர அனைவரும் இந்தியாவிற்குள் வரலாம் எனச் சொல்லுகிறார்கள். அப்படி என்றால் இலங்கைக்கு மட்டும் ஏன் தடை விதிக்கிறார்கள். இது ஈழத்தமிழர்களுக்கு பா.ஜ.க, அ.தி.மு.க இழைக்கிற மாபெரும் துரோகம்.

மக்கள் விரோத, மதச்சார்பின்மையை குழித்தோண்டி புதைக்கிற இந்தச் சட்டத்தை பிடிவாதமாக அமல்படுதியுள்ளது மத்திய பா.ஜ.க அரசு. இதற்கு அடிபணிந்து ஆதரவளித்துள்ளது அ.தி.மு.க அரசு. தமிழினத்தின் மீது நடத்தப்படும் எத்தகைய தாக்குதலையும் எதிர்த்து நிற்கும் தெம்பும் திராணியும் திமுகவிற்கு உண்டு’’ எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories