தி.மு.க

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் வெற்றி பெறும்-உதயநிதி ஸ்டாலின்

நடிகர் விஜய் சரியான கருத்தைத்தான் கூறியுள்ளார் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் வெற்றி பெறும்-உதயநிதி ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் நகரம் எஸ்.ஆர்.டி கார்னரில் உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு முகாமை தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய உதயநிதி தமிழகத்தில் ஒரு கேடுகெட்ட ஆட்சி நடப்பதாகவும் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தலைவர் ஸ்டாலின் முதல்வராவார் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், ''30 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதை இலக்காக கொண்டு பணியாற்றி வருகிறோம் .இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வருகிறார்கள். பெண்களும் ஆர்வத்துடன் வருகிறார்கள், பெண்களை இளைஞர் அணியில் சேர்ப்பது குறித்து தலைமையிடம் கேட்டு ஆலோசனை பெற்று முடிவெடுக்கப்படும்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் வெற்றி பெறும். தி.மு.க இளைஞர் அணி தி.மு.க மற்றும் காங்கிரஸ் வெற்றிக்காக பாடுபடும். நடிகர் விஜய் பேசிய கருத்தை நான் வரவேற்கிறேன். அவர் சரியான கருத்தைத்தான் கூறியுள்ளார். தி.மு.க தலைவரும் தி.மு.க நிகழ்ச்சிகளில் பேனர் வைக்கவேண்டாம் என்று தான் கூறி உள்ளார் .கடந்த 4 நாட்களாக நடைபெறும் இளைஞர் அணி நிகழ்ச்சிகளிலும் பேனர் வைக்கப்படவில்லை'' எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories