தி.மு.க

“சாதி, மதங்களைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் மொழி மட்டுமே” : கனிமொழி எம்.பி., பேச்சு!

நம் அனைவரையும் தமிழ் மொழி ஒன்றிணைத்து வருகிறது என தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார்.

“சாதி, மதங்களைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் மொழி மட்டுமே” : கனிமொழி எம்.பி., பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூர் மாவட்டத்தில் குடிமல்லூர் தி.மு.கவினர் சார்பில் கலைஞர் அறிவாலயம் அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தி.மு.க எம்.பி., கனிமொழி பங்கேற்று அடிக்கல் நாட்டி வைத்தார்.

இதனையடுத்து, வாலாஜாபேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கல்லூரியில் மாணவிகள் முன்னிலையில் கனிமொழி உரையாற்றினார்.

“சாதி, மதங்களைக் கடந்து அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் மொழி மட்டுமே” : கனிமொழி எம்.பி., பேச்சு!

அப்போது பேசிய அவர், “எந்தச் சூழல் ஏற்பட்டாலும் பெண்கள் தன்னம்பிக்கையை விட்டுவிடக் கூடாது. தைரியமும், தன்னம்பிக்கையும் தான் பெண்களுடைய ஆயுதம். ஒரு பெண்ணுக்கு அளிக்கக் கூடிய கல்வி, சமூகத்தையே மாற்றியமைக்கூடிய வல்லமை உடையது.” என நம்பிக்கையூட்டினார்.

மேலும், “சாதி, மதங்களை கடந்து நம் அனைவரையும் ஒன்றிணைப்பது தமிழ் மொழி மட்டுமே. இது மரத்தின் வேரைப் போன்றது. இது பண்பாட்டின் அடையாளம்” என தமிழ் மொழிக்கு புகழாரம் சூட்டினார் கனிமொழி.

banner

Related Stories

Related Stories