தி.மு.க

வேலூர் தேர்தல் வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்தது - கதிர் ஆனந்த் எம்.பி

வேலூர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து மக்களவையில் தி.மு.க.வின் பலம் 24ஆக அதிகரித்துள்ளது.

வேலூர் தேர்தல் வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்தது - கதிர் ஆனந்த் எம்.பி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை வேலூரில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் தொடங்கி நடைபெற்றது.

இதில், தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கதிர் ஆனந்த், அ.தி.மு.க சார்பாக போட்டியிட்ட ஏ.சி.சண்முகத்தை விட, 10 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழையும், தேர்தல் அதிகாரியிடம் இருந்து கதிர் ஆனந்த் பெற்றுக்கொண்டார்.

வேலூர் தேர்தல் வெற்றி தலைவர் மு.க.ஸ்டாலின் உழைப்புக்கு கிடைத்தது - கதிர் ஆனந்த் எம்.பி

வேலூர் தொகுதியில் தி.மு.க வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழகத் தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த், தான் பெற்ற வெற்றி முழுக்க முழுக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றும், இந்த வெற்றியை அவருக்கு சமர்ப்பிப்பதாகவும் பேசியுள்ளார்.

இது தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரில் பெற்ற வெற்றியின் மூலம் மக்களவையில் தி.மு.க.,வின் பலம் 24 ஆக உயர்ந்துள்ளது.

banner

Related Stories

Related Stories