தி.மு.க

கலைஞரின் பணிகள், போராட்டங்கள் பற்றி அறிய பிரத்யேகமான இணையதளம்... தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!

கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வசதியாக உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தைத் தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்.

கலைஞரின் பணிகள், போராட்டங்கள் பற்றி அறிய பிரத்யேகமான இணையதளம்... தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வசதியாக புதிய இணையதளத்தைத் தொடங்கி வைத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்வில் நடைபெற்ற மக்கள் பணிகள், மேடைப் பேச்சுகள், பத்திரிக்கையாளர் சந்திப்பு, அரிய புகைப்படங்கள், கவிதைகள், கட்டுரைகள், புத்தகங்கள், கலைப் பயணங்கள் என அவர் வாழ்வில் நடைபெற்ற அனைத்து சுவாரஸ்ய நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதற்கு வசதியாக இணையதளம் ஒன்று தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் kalaignar.dmk.in என்ற இணையதள முகவரியில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தைத் தொடங்கி வைத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பற்றி தெரிவித்த கருத்துகள் அடங்கிய வீடியோக்களை பார்வையிட்டு ரசித்தார். இந்த இணையதளத்தை இன்னும் மெருகேற்ற பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.

இணையதளத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கழக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பிடிஆர்பி தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories