தி.மு.க

துர்கா ஸ்டாலின் பற்றிய அவதூறு செய்தி : ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆனந்த விகடனுக்கு நோட்டீஸ்!

ஜூனியர் விகடன் இதழில் அவதூறாக பொய்ச்செய்தி வெளியிட்ட விகடன் குழுமத்தின் அச்சகத்தார் மற்றும் வெளியீட்டாளருக்கு, திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள் சார்பில், நஷ்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

துர்கா ஸ்டாலின் பற்றிய அவதூறு செய்தி : ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆனந்த விகடனுக்கு நோட்டீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜூனியர் விகடன் இதழில் அவதூறாக பொய்ச்செய்தி வெளியிட்ட விகடன் குழுமத்தின் அச்சகத்தார் மற்றும் வெளியீட்டாளருக்கு, திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள் சார்பில், வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி., நஷ்டஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஜூலை 24, 2019 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் தி.மு.க-வைச் சேர்ந்த திருமதி. துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டோர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தும் வகையிலான கட்டுரை ‘திராவிட முன்னேற்ற கம்பெனி’ என்கிற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

அந்தக் கட்டுரையில் கூறப்பட்ட உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்தும், தவறான தகவல்களை வெளியிட்டு அவதூறு செய்ததற்காகவும் திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள் சார்பில் வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி., அவர்கள் ஆனந்த விகடன் குழுமத்திடம் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கற்பனையான நோக்கில் தவறான தகவல்கள் கொண்ட கட்டுரையை வெளியிட்டு திருமதி. துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக மறுப்புச் செய்தியை வெளியிடுவதோடு, நஷ்ட ஈடாக ரூபாய் 10 கோடி வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றியும் ஜூனியர் விகடன் இதழில் பொய்ச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின், ஜூனியர் விகடன் அச்சகத்தார், வெளியீட்டாளர், ஆசிரியர் ஆகியோர் மீது 100 கோடி நஷ்ட ஈடு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு உரிய பதிலளிக்கப்படாததால் நஷ்ட ஈடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories