தி.மு.க

“தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோரின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கும் 10% இடஒதுக்கீடு” : கனிமொழி பேச்சு!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 % இட ஒதுக்கீடு எவ்வாறு சமூக நீதிக்கு எதிராகவும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உரிமையைப் பறிப்பதாகவும் அமைந்துள்ளது எனப் பேசினார் கனிமொழி எம்.பி.,

“தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோரின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கும் 10% இடஒதுக்கீடு” : கனிமொழி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த இட ஒதுக்கீட்டிற்கு தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதுகுறித்து விவாதிப்பதற்காக தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், தி.மு.க, வி.சி.க, ம.தி.மு.க உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. இந்நிலையில், வங்கித் தேர்வுகளில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்துள்ளது.

ஸ்டேட் வங்கித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், அடுத்தகட்ட தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன. அதன்படி, பொதுப்பிரிவு 61.25, தாழ்த்தப்பட்டோர் 61.25, பழங்குடியினர் 53.75, பிற்படுத்தப்பட்டோர் 61.25, உயர்வகுப்பு ஏழைகள் 28.5 மதிப்பெண்கள் என்ற அதிர்ச்சி தரும் விவரம் வெளிவந்துள்ளது.

இத்தகைய பொருளாதார இடஒதுக்கீட்டின் மூலம் சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைத்துள்ளது பா.ஜ.க என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். இந்நிலையில், இன்று மக்களவையில் பேசிய கனிமொழி எம்.பி., பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 % இடஒதுக்கீடு எவ்வாறு சமூக நீதிக்கு எதிராகவும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் உரிமையைப் பறிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதையும் சமீபத்தில் நடந்த ஸ்டேட் பாங்க் தேர்வை மேற்கோள் காட்டிப் பேசினார்.

இதுகுறித்துப் பேசிய கனிமொழி, “பட்டியல் இனத்தவருக்கு 53.75 சதவீதமும், பிற்படுத்தப்பட்டோருக்கு 61 எனவும் கட் ஆப் மார்க் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு மட்டும் 28.5 என்ற குறைந்த கட்ஆப் நிர்ணயிக்கப்பட்டது ஏற்கத்தக்கது அல்ல” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், “உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு என்பது சமூகநீதிக்கு எதிரானது. இதனால் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவை சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது. இதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்” என கனிமொழி என்.பி., வலியுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories