தி.மு.க

“சமூக நீதியையும், சமத்துவத்தையும் போற்றும் தமிழ் மண்ணிலிருந்து...” - தமிழச்சி தங்கபாண்டியனின் முதல் உரை!

தென் சென்னை தி.மு.க எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் இன்று மக்களவையில் முதன்முறையாக உரையாற்றினார்.

“சமூக நீதியையும், சமத்துவத்தையும் போற்றும் தமிழ் மண்ணிலிருந்து...” - தமிழச்சி தங்கபாண்டியனின் முதல் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தென் சென்னை தி.மு.க எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் இன்று மக்களவையில் முதன்முறையாக உரையாற்றினார். மக்களவையில் தனது உரையைத் தொடங்கிய அவர், தமிழ் மண்ணின் பெருமைகளை எடுத்துரைத்துப் பேசத் தொடங்கினார்.

அவர் பேசியதாவது, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றுரைத்த கணியன் பூங்குன்றனாரின் மண்ணிலிருந்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.” என சமூக நீதியையும், சமத்துவத்தையும் போற்றிய திருவள்ளுவரின் தமிழ் மண்ணிலிருந்து வருகிறேன்.

திராவிட இயக்கத் தலைவர் பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் செயல்படும் தி.மு.க சார்பில் இந்த அவைக்கு வந்திருக்கிறேன். கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் மதிப்பளிக்கும் தமிழ் மக்களுக்காக வந்திருக்கிறேன்.” என்றார்.

தொடர்ந்து பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், தனிப்பொறுப்புள்ள முதல் பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, பட்ஜெட் குறித்துப் பேசத் தொடங்கினார் .

தொடர்ந்து அவர் பேசுகையில், “இந்திய நாடு, முற்றிலும் தொழிலாளர்களின் உழைப்பைக் கொண்டுதான் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், தற்போது தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசு கார்ப்பரேட்களுக்கும், தனிப்பெரும் நிறுவனங்களுக்கும் வரிசலுகை அளித்திருக்கிறது.

பட்ஜெட்டில், நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை எதுவும் வழங்கப்படவில்லை, விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பால் பெண்கள் தாலிக்கு தங்கம் வாங்குவது கூட கனவாகி உள்ளது” என வேதனை தெரிவித்த தமிழச்சி தங்கபாண்டியன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டதிற்கு தனது எதிர்ப்பையும் பதிவுசெய்தார்.

banner

Related Stories

Related Stories