தி.மு.க

இந்தி பேசாத மாநிலங்களை ஒடுக்கும் முயற்சியில் பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருகிறது - தயாநிதி மாறன்!

இந்தி பேசாத மாநிலங்களை ஒடுக்கும் முயற்சியில் பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருவதாக தயாநிதி மாறன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்தி பேசாத மாநிலங்களை ஒடுக்கும் முயற்சியில் பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருகிறது - தயாநிதி மாறன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

சென்னை மண்ணடியில் தி.மு.க சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமை தயாநிதி மாறன் எம்.பி தொடங்கி வைத்தார். கண் மருத்துவம், சர்க்கரை, பல், ரத்தப்பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துறைமுகம் எம்.எல்.ஏ சேகர்பாபு உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் எம்.பி, ''மத்தியில் மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ள பா.ஜ.க அரசு, இந்தி பேசாத மாநிலங்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மாநில மொழிகள் உள்பட3 மொழிகளில் தபால் துறை தேர்வு எழுதலாம் என்ற இருந்ததை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என மாற்றி இருப்பது கண்டனத்துக்குரியது. சம்மந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தித்து, மீண்டும் 3 மொழிகளில் தேர்வெழுதும் முறையை அமல்படுத்த வலியுறுத்துவோம்'' இவ்வாறு தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories