தி.மு.க

தனது செயலால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!

மதுரை மத்திய தொகுதி தி.மு.க எம்.எல்.ஏவான, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ட்விட்டரில் அவர் பகிர்ந்த ஒரு தகவல் வைரல் ஆகியிருக்கிறது.

தனது செயலால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மதுரை மத்திய தொகுதி தி.மு.க எம்.எல்.ஏvum, தி.மு.கவின் தகவல் தொழில்நுட்ப அணியில் செயலாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வித்தியாசமான அரசியல்வாதி. தனெக்கென ஒரு தனிபாணி அமைத்துக் கொண்டவர். பொருளாதார நிபுணரான இவர் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்' (standard chartered) வங்கியில் முக்கிய அதிகாரியாக பொறுப்பு வகித்து வந்தவர். கோடிகளை கொடுக்கும் பணியை விட்டுவிட்டு, தாத்தா பி.டி ராஜன் மற்றும் தனது தந்தை பி.டி.ஆர் பழனிவேல் ராஜனின் வழியில் இவரும், அரசியல் மார்க்கம் எடுத்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

வெற்றி பெற்ற நாள் முதலே தொகுதிக்கான பணிகளை செய்வதில் மிகுந்த அக்கறையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட்டு வருகிறார். தொகுதி மக்கள் தங்கள் குறைகளை மெயில் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும், தெருக்களில் அமைக்கப்பட்டிருக்கும் புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம் என, மக்கள் தன்னை எளிதல் அணுகும் வழியை உருவாக்கினார். கோரிக்கைகளை நிறைவேற்றி தொகுதி மக்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில் , சமூக வலைதளங்களில் பிரபலமான துருவ் ரதீ என்கிற பத்திரிகையாளர் ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் " மக்கள் பிரதிநிதிகள், தங்கள் தொகுதிக்குச் செய்யும் பணிகள் பற்றி ஏன் ஆண்டுதோறும் அறிக்கையாக வெளியிடக் கூடாது?. அதை வலியுறுத்தி சட்டம் இயற்றலாமே” என்று தனது வீடியோவில் பதிவிட்டிருந்தார். ரதீயின் இந்த பதிவுக்கு எம்.எல்.ஏவான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அளித்த பதில் தற்போது வைரலாகியுள்ளது.

அவர் அளித்த பதிலில் '' ஒரு எம்.எல்.ஏ.வாக, எனது தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் கூறியததைப் போல, ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் ஒரு அறிக்கையை வெளியிடுகிறேன். ஐந்து அறிக்கைகள் (6, 12, 18, 24, 30 மாதங்கள்) ஏற்கனவே ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல, எனது தொகுதியில் உள்ள 78,000 வீடுகளுக்கு நேரடியாக அறிக்கை வழங்கப்பட்டுள்ளது'' என்று பதிலளித்தார்.

பி.டி.ஆரின் இந்த பதிலைக் கண்ட ரதீ, அதற்கான ஆதாரங்களைக் கேட்டார். ஆதாரங்கள் அத்தனையையும் அங்கு பதிவு செய்தார் தியாகராஜன். அதுமட்டுமல்ல, அந்த அறிக்கை அத்தனையும் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த இணையதள லிங்க்கையும் பதிவிட்டார். (மதுரை மத்திய தொகுதி மேம்பாட்டுப் பணிகள் குறித்த விவரங்கள் இங்கே.)

அவரது அறிக்கையில், மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் எத்தனை, புகார் வகைகள் என்ன, அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, தீர்க்கப்படாத மனுக்கள் எத்தனை, தொகுதி நிதி எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது, எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என தெளிவாகவும், விரிவாகவும் கொடுத்துள்ளார்.

மதுரை எம்.எல்.ஏவின் இந்த செயல் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ட்வீட் வைரலாகியது. வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகத்தை தனி ஒரு நபராகவே கொடுக்க முடியும் என்பதை நிரூபித்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் இந்த செயல் புகழப்பட்டு வருகிறது.

மேலும், ''இவரைப் போன்று தாங்கள் என்ன செய்தோம் என்று வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டுமென்று, உங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு ஏன் உத்தரவு போடக் கூடாது? '' என்று பல்வேறு கட்சித் தலைவர்களை டேக் செய்து சமூக வலைத்தளத்தில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதை இந்திய அரசு ஒரு சட்டமாகவே இயற்ற வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த ட்வீட் இந்திய முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை எம்.எல்.ஏவின் இந்த செயல் இந்தியாவுக்கே ஒரு முன்மாதிரி எனவும் பாராட்டப்படுகிறது.

banner

Related Stories

Related Stories