தி.மு.க

தங்க தமிழ்செல்வனின் இந்தச் சாதனை தெரியுமா?

தி.மு.கழகத்தில் இணைத்துக்கொண்ட தங்க தமிழ்செல்வன், “ஆளுமை மிக்க தலைவரை ஏற்று தி.மு.க-வில் இணைந்துள்ளேன்” எனும் பதிவை இட்டுள்ளார்.

தங்க தமிழ்செல்வனின் இந்தச் சாதனை தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.ம.மு.க-வில் கொள்கை பரப்புச் செயலாளராக பதவி வகித்துவந்த தங்க தமிழ்செல்வன் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அ.தி.மு.க-வில் தேனி மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வந்த தங்க தமிழ்செல்வன் அக்கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெற்றவர். பெரியகுளம் எம்.பி-யாக இருந்த டி.டி.வி.தினரன், அங்கு எம்.எல்.ஏ-வாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மத்தியில் அப்பகுதியில் அக்கட்சியை வளர்த்ததில் தங்க தமிழ்செல்வனுக்கும் பங்குண்டு.

அ.தி.மு.க-வை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து கைப்பற்றியதையடுத்து தினகரனோடு தோள்நின்ற தங்க தமிழ்செல்வனின் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ பதவியும் அ.தி.மு.க அரசின் தூண்டுதலால் பறிக்கப்பட்டது.

தங்க தமிழ்செல்வனின் இந்தச் சாதனை தெரியுமா?

முன்னதாக, தமிழக சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக வெளிநடப்பு செய்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ எனும் பெயரையும் பெற்றவர் தங்க தமிழச்செல்வன். கடந்த 2017-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், சுகாதாரத்துறை குறித்து கேள்வி எழுப்ப அனுமதி கேட்ட தங்க தமிழ்செல்வனுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்தார் தங்க தமிழ்செல்வன்.

தேனி மாவட்டத்தின் முக்கிய அரசியல் ஆளுமையான தங்க தமிழ்செல்வன் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டார். அங்கு தோல்வியடைந்த நிலையில், சில கட்சிக்காரர்கள் சரியாகப் பணியாற்றவில்லை என வெளிப்படையாகவே அறிவித்தார்.

இதையடுத்து, அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் மோதல் ஏற்பட்ட நிலையில், அவரது குறைகளைச் சுட்டிக்காட்டி விமர்சித்தார். இதையடுத்து, தனக்கு மதிப்பளிக்காத அ.ம.மு.க-வில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார்.

தங்க தமிழ்செல்வனின் இந்தச் சாதனை தெரியுமா?

தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த அவர், “தமிழக மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் தலைவராகவும், ஆளுமைமிக்க தலைவராகவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். இதற்கு நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளே சாட்சி” என தெரிவித்தார் தங்க தமிழ்செல்வன்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.கழகத்தில் இணைத்துக்கொண்ட தங்க தமிழ்செல்வன், தனது காரில் தி.மு.க கழகக் கொடியைப் பொருத்தியதோடு, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எவராலும் வீழ்த்தமுடியாத இயக்கம் திராவிட இயக்கம்’ எனும் முகப்பையும், “ஆளுமை மிக்க தலைவரை ஏற்று தி.மு.க-வில் இணைந்துள்ளேன்” எனும் பதிவையும் இட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories