தி.மு.க

நான் கூறியது கலகக் குரல் அல்ல - கே.என்.நேரு விளக்கம் !

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க தனித்து போட்டியிட வேண்டும் என்று நான் கூறியது கலகக் குரல் அல்ல என திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.

நான் கூறியது கலகக் குரல் அல்ல - கே.என்.நேரு விளக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை கண்டித்துதமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தனித்து போட்டியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தன்னிலை விளக்கம் அளிக்க கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க தனித்து போட்டியிட வேண்டும் என்று நான் கூறியது கலகக் குரல் அல்ல. தி.மு.க அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதால் கூறினேன். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க வெளியேற வேண்டும் என்று நான் கூறவில்லை.

தி.மு.க தலைவருக்கு முழுமையாக கட்டுப்பட்ட ஒரு மாவட்ட செயலாளர் நான். ஒரு மாவட்டச் செயலாளராக எனது கருத்தை சொன்னேன். ஒரு தொண்டன் என்ற முறையிலேயே எனது கருத்தை தெரிவித்தேன். கூட்டணி குறித்து மாவட்டச் செயலாளராகிய நான் எப்படி முடிவு எடுக்க முடியும். தி.மு.க தலைவர்தான் முடிவு எடுப்பார். தன்னிலை விளக்கத்திற்காக மட்டுமே செய்தியாளர்களை சந்தித்தேன் '' என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories