தி.மு.க

ஆய்வுக்கு வர மறுத்த அதிகாரியை தாம்பூல தட்டு வைத்து அழைத்த தி.மு.க எம்.எல்.ஏ ! 

மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய அழைப்பு விடுத்தும் வராத அதிகாரியை அவரது அலுவலகத்திற்கே நேரில் சென்று தாம்பூல தட்டு வைத்து ஆய்வுக்கு வரவேற்றார்.

ஆய்வுக்கு வர மறுத்த அதிகாரியை தாம்பூல தட்டு வைத்து அழைத்த தி.மு.க எம்.எல்.ஏ ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்துள்ள பேரையூர் கிராமத்தில் வடவாறு வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் நீரை பேரையூரைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், வாய்காலின் இருபுறமும் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இதனால், 10 மீட்டர் இருந்த வடவாறு வாய்காலின் அகலம், 5 மீட்டராகக் குறைந்தது. இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை.

ஆய்வுக்கு வர மறுத்த அதிகாரியை தாம்பூல தட்டு வைத்து அழைத்த தி.மு.க எம்.எல்.ஏ ! 

இதை அறிந்த மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அப்பகுதிக்கு சென்று வடவாறு வாய்க்காலை ஆய்வு செய்தார். அப்போது, பேரையூர் கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனை வடவாறு வாய்க்கால் பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்ய அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அந்த கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆலோசனைக்கு வரமால், வேறு பணி இருப்பதாக சட்டமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கு வர மறுத்த அதிகாரியை தாம்பூல தட்டு வைத்து அழைத்த தி.மு.க எம்.எல்.ஏ ! 

இதையடுத்து, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, கிராம நிர்வாக அலுவலரை அவரது அலுவலகத்திற்கே நேரில் சென்று தாம்பூல தட்டு வைத்து, ஆய்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இந்த சம்பவம் மன்னார்குடி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிக்கு அழைப்பு விடுத்தும், அவர்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியடை செய்துள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசு அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் செயல்படுவதால், எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருக்கின்றனர்என்று குற்றசாட்டி உள்ளனர்.

இதுகுறித்து கூறிய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, "இன்று மன்னார்குடியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நீர்நிலையை ஆய்வு செய்ய சென்ற பொழுது ஆய்வுக்கு வர மறுத்த ஒரு அதிகாரியை நேரில் சென்று வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தேன். இனிமேலும், அதிகாரிகள் ஆய்வுக்கு வர மறுத்தால் அவர்களையும் இதே முறையில் அழைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories