தி.மு.க

தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்பு!

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்ற தி.மு.க. வேட்பாளார்கள் இன்று எம்.எல்.ஏக்களாக பதவியேற்க உள்ளனர். 

தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்.,18 மற்றும் மே 19ல் 18 மற்றும் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும்கட்சியான அதிமுகவைவிட அதிக தொகுதிகளில் மகத்தான வெற்றியை அடைந்துள்ளது. குறிப்பாக அதிமுகவின் தொகுதிகள் திமுக வசம் வந்திருப்பது திமுக தொண்டர்களும் கூட்டணி கட்சியினரும் பெரு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றிக்கனியை ருசித்த திமுகவினர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவரது தலைமையில் தலைமைச் செயலகம் செல்லவுள்ளனர்.

இதனையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் தனபால் அறையில், திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்க உள்ளனர். இதில், கழகத்தின் முன்னணி நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர்.

banner

Related Stories

Related Stories