தி.மு.க

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் - செந்தில்பாலாஜி உறுதி !

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி உறுதிப்படக் கூறினார்.

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் - செந்தில்பாலாஜி உறுதி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தில் காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் வி. செந்தில்பாலாஜி உள்பட மொத்தம் 63 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதனிடையே அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், "தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறையினர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறுவது உறுதி. அரவக்குறிச்சி இடைத்தேர்தலை காவல்துறை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது." இவ்வாறு கூறினார்.

banner

Related Stories

Related Stories