சினிமா

Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!

BB 9 வீடு இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில், Elimination-ல் உள்ள அப்சரா மற்றும் கமருதீன் இருவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதாக சக போட்டியாளர்கள் கூறும் காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
S Ramya
Updated on

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்கி 13 நாட்களை கடந்து விட்டது. நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே தனக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்க விருப்பம் இல்லை என கூறி, நந்தினி வீட்டில் இருந்து வெளியேறினார். இவரை தொடந்து பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற முதல் வார இறுதியில் நடைபெற்ற ஏவிக்க்ஷன் பிராஸில் பிரவீன் காந்தி மக்களிடம் குறைவாக வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டார். 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் இருவர் வெளியேறிய நிலையில் 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி 2-வது வாரத்தில் நகரத் தொடங்கியது. இதில் வீட்டு தலையாக துஷார் தேர்வான நிலையில் அவருக்கு தனி அறை போன்ற பல சலுகைகள் வழங்கப்பட்டிருந்தது.

இதனிடையே, பிக்பாஸ் வீட்டாரும், super deluxe வீட்டாரும் இடம் மாறவேண்டிய தருணம் வந்தது. இதற்காக 'நடிகன்டா' என்ற டாஸ்க் ஒன்று இருவீட்டாருக்கும் வழங்கப்பட்டது. இந்த டாஸ்கில் super deluxe வெற்றி பெற்றால் swap நடக்காது. அதுவே பிக்பாஸ் வீட்டு அணி வெற்றி பெற்றால், super deluxe வீட்டில் இருந்து 2 நபர்களும் பிக்பாஸ் வீட்டில் இருந்து 3 நபர்களும் வீடு மாற வேண்டும் என்பது விதி. இந்த டாஸ்க்கிற்காக இரு வீட்டில் இருந்தும் தலா மூன்று நபர்கள் என மொத்தம் 6 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு விஜய் சேதுபதியின் ''காத்துவாக்குல ரெண்டு காதல்'' படத்தில் இருந்து ஒரு காட்சி ஒளிபரப்பட்டது.

Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!

பின்னர், அந்த குறிப்பிட்ட காட்சி வசனமின்றி ஒளிபரப்பட்டு அதற்கு போட்டியாளர்கள் வசனத்துடன் நடித்து காட்டினர். இதில், சபரி, பிரவீன், விக்ரம், கம்ருதின், கானா வினோத் மற்றும் சுபிக்‌ஷா ஆகியோர் பங்கேற்று நடித்து காட்டிய நிலையில் இறுதியில் பிக்பாஸ் அணி வெற்றி பெற்றது. இதனால், பிக்பாஸ் வீட்டில் இருந்த VJ பார்வதி, watermelon star திவாகர் மற்றும் ஆதிரை ஆகியோர் super deluxe வீட்டிற்கு செல்ல அதே போல, ஏற்கனவே super deluxe வீட்டில் இருந்த அரோரா, கமருதீன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றனர்.

இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் nomination free pass ஐ யாரெல்லாம் பயன்படுத்திக்கொள்வது என்ற விவாதம் நடந்தது. இதில், வியன்னா, ஆதிரை, வினோத் ஆகியோர் இந்த pass ஐ பெற்றுக்கொண்டு இந்த வாரம் தங்களை காப்பாற்றிக்கொண்டனர். இதையடுத்து, VJ பார்வதி, கமருதீன், அரோரா, FJ, அப்சரா, ரம்யா ஜோ, சபரி, கெமி, watermelon star திவாகர் ஆகியோர் இந்த வாரத்திற்கான nomination process-ல் இடம்பெற்றனர்.

Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!

இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இரண்டாவது வாரத்திற்கான weekly task-ஐ அறிவித்தார் பிக்பாஸ். அதுவும், அனைத்து சீசனிலும் கலவரத்தை ஏற்படுத்தும் பொம்மை டாஸ்க். இதற்கு இந்த முறை "The Mask" என்று பெயரிடப்பட்டு, "madras படத்துல வர wall விட danger ஆன wall இது" என்று மாஸ்கை எடுத்து சென்று வைக்க வேண்டிய இடத்திற்கு buildup-கள் கொடுக்கப்பட்டது. வீட்டிற்குள் 18 போட்டியாளர்கள் இருக்க 17 slots வழங்கப்பட்டு இருந்தது.

இதில், பிக்பாஸ் வீட்டார் அவர்களுடைய மாஸ்க்கை எடுக்க கூடாது. ஆனால், super deluxe வீட்டார் அவர்களுடைய மாஸ்க்கையும் எடுக்கலாம் இல்லையென்றால் பிறருடைய மாஸ்க்கும் எடுக்கலாம் என்ற சலுகை வழங்கப்பட்டது. மேலும் பிக் பாஸ் வீட்டார் வெற்றி பெற்றால் nomination free pass மற்றும் சிறப்பு விருந்து கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் super deluxe வீட்டில் இருந்து நான்கு போ் நாமினேஷனுக்கு செல்வர். இதில் இரு வீட்டாரும் தனித்தனி அணியாக பிரிந்து தங்களது ஆட்டங்களை ஆடத்தொடங்கிய நிலையில், டாஸ்கில் முதலாவதாக வெளியேறியது கெமி. இவரை தொடர்ந்து, VJ பார்வதி, வினோத், அரோரா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, ஆட்டத்தை வீட்டு வெளியில் சென்றோரை defence mode-ல் மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தார் பிக்பாஸ்.

இதையடுத்து, கலையரசன், watermelon star திவாகர், வியானா, பிரவீன் குமார், ஆதிரை, ரம்யா ஜோ, FJ என வரிசையாக வெளியேறினர். டாஸ்க் இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு முன்பே super deluxe வீட்டார் அனைவரும் வெளியேறியதால், nomination free pass-ம் பிக்பாஸ் வீட்டிற்குத்தான், சிறப்பு விருந்தும் பிக்பாஸ் வீட்டிற்குத்தான் என்று ஆனது. இறுதியாக, துஷார், சபரி மற்றும் கமருதீன் இடையே போட்டி நடந்தது. இதில் கமருதீன் வெற்றி பெற்று அடுத்த வாரத்திற்கான nomination free pass ஐ தனதாக்கிக்கொண்டார்.

Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!

வீட்டில் போட்டியாளர்கள் பகலில் தூங்குவது, மைக்கை எங்கேயாவது கழட்டி வைத்து விட்டு வலம்வருவது போன்ற செயல்கள் ஒரு புறம் இருக்க, இங்கே வீட்டுத்தலையாக தேர்வான துஷாரே தன்னுடைய மைக்கை மறந்துவிட்டு வந்து அரோராவுடன் பேசிக்கொண்டிருந்தார். இதனால், "மைக்கை மாட்டுங்க துஷார்" என்று பிக்பாஸ் சுட்டிக்காட்ட மைக் எடுக்க சென்ற துஷார் மறந்து மீண்டும் திரும்பி வந்தார். இதனுடைய விளைவால் அனைவரையும் ஒன்று கூட்டிய பிக்பாஸ், "இந்த சீசனில் யாரிடமும் discipline-ஏ இல்லை" என்று கூறியதுடன், "துஷார் இது எத்தனாவது sorry னு கூட மறந்துட்டேன், நீங்களே மைக் மாட்ட மறந்துடுறிங்க, வீட்டு தல பெரிய பதவி. discipline இல்லாத வீட்டுக்கு, வீட்டு தலையும் தேவையில்லை. நீங்க இனி பிக்பாஸ் வீட்டின் அங்கம் மட்டுமே" என கூறி துஷாரிடம் இருந்து அவரது பதவியை பறித்துவிட்டார்.

Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!

இதையடுத்து, இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் சிறந்த போட்டியாளர்களாக செயல்பட்ட இரண்டு நபர்களை தேர்வு செய்யும்படி கூறினார் பிக்பாஸ். இதில், கனி மற்றும் சபரியை சக போட்டியாளர்கள் தேர்வு செய்தனர்.இதையடுத்து, மாஸ்க் டாஸ்க்கில் ஏற்கனவே வென்ற கமருதீன், கனி மற்றும் சபரி ஆகியோரிடையே அடுத்த வாரத்திற்கான வீட்டுத்தல யார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி நடைபெறும் என்று அறிவித்தார் பிக்பாஸ். இதில் போல இந்த வாரம் வீட்டில் worst performer இருவரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்தனர். இதில் ஆதிரை மற்றும் அரோரா தேர்வாக இருவரும் சிறைக்கு சென்றனர்.

இதனிடையே, 3வது வாரத்திற்கான வீட்டுத்தலையை தேர்வுசெய்யும் "குத்துங்க எஜமான் குத்துங்க" என்ற டாஸ்க் நடந்தது. இதில், போட்டியாளர்கள் மூன்றுபேரின் உருவபொம்மைகள் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்டவருக்குத் தெரியாமல் கத்தியால் மற்றவர்கள் குத்த வேண்டும், ஒரு பொம்மை மூன்று முறை கத்தியால் குத்தப்பட்டால் அவர்கள் out என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த டாஸ்கில் வெற்றி கனி வெற்றிபெற்றார்.

பிக்பாஸ் சீசன் 9, இரண்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் வார இறுதி நாளான நேற்று, "இந்த வீட்டுல சிலபேரோட குரலுக்கு பின்னாடி பல பேர் ஒளிஞ்சிகிட்டு இருக்காங்க, அது பாதுனாலையா? இல்லைனா வசதியா இருக்குனு ஒளிஞ்சிகிட்டு இருக்காங்களான்னு தெரியல" என்று கூறியபடி வந்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர்களை சந்தித்தார்.

Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!

இதில், இந்த வாரம் வீட்டில் நடைபெற்ற "குத்துங்க எஜமான் குத்துங்க" டாஸ்க் குறித்து பேசிய விஜய் சேதுபதி போட்டியாளர்களின் நிறை குறைகளை சுட்டிக்காட்டினார். மேலும், "இரண்டு வாரம் இருந்துருக்கீங்க.. ஒருத்தரைப் பத்தி ஒருதருக்கு நல்லா தெரிஞ்சிருக்கும். இந்த வீட்டில் இரு முகம் கொண்ட நபர்- ன்னு ஒரு ஒருத்தரும் ஒரு நபரை சொல்லுங்க'' என்று வினவினார்? இதில், கெமி, விக்ரம், துஷார் ஆகியோர் VJ பார்வதியின் பெயரையும், ஆதிரை, கமருதீன், அப்சரா ஆகியோர் ரம்யா ஜோவின் பெயரை கூறினர். மேலும், கனி, சுபிக்‌ஷா, வியானா, கலையரசன் ஆகியோர் சபரியின் பெயரை குறிப்பிட்டு இருந்தனர்.

Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!

சீசன் 9 தொடங்கி இரண்டு வாரங்களை கடந்துவிட்டது. எனினும் சுவாரசியம் குறைவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், அப்சரா, கெமி, அரோரா, FJ, கமருதீன் ஆகியோர் இந்த வார நாமினேஷனின் இறுதி கட்டத்தில் இருப்பதை காண முடிகிறது. மேலும், இந்த 5 பேரில் யார் eliminate ஆவானு நினைக்கிறீங்க என்று சக போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி கேள்வி எழுப்புகிறார். இதில் பெரும்பாலானோர் அப்சரா மற்றும் கமருதீன் ஆகியோரின் பெயர்களை கூறியுள்ள நிலையில் வீட்டின் உள்ளேயும் அப்சராவின் பங்கு குறைவாகவே இருப்பதால் அப்சரா வெளியேற வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories