சினிமா

உரிமைக்காக, ஒடுக்குமுறைக்காக புரட்சிகள் நடப்பது இயல்பு ; Managers vs Workers - BB வீடு!

உரிமைக்காக, ஒடுக்குமுறைக்காக புரட்சிகள் நடப்பது இயல்பு, ஆனா இந்த வீட்ல அதோட தேவை இருந்ததா? என போட்டியாளர்களை தொகுப்பாளர் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பும் காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

உரிமைக்காக, ஒடுக்குமுறைக்காக புரட்சிகள் நடப்பது இயல்பு ; Managers vs Workers - BB வீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தொடங்கி 65 நாட்களை கடந்து விட்டது. போன வார இறுதியில் double eviction நடைபெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆர். ஜே. ஆனந்தி மற்றும் சாச்சானா ஆகியோர் வெளியேறி இருந்தனர். இதையடுத்து captancy டாஸ்கில் வெற்றி பெற்றிருந்த ரஞ்சித் இந்த வாரம் அன்பு வாரமாக அமையவேண்டும் என கூறி கேப்டனாக பொறுப்பேற்றார். இந்த முறை கேப்டனுக்கு 3 முட்டைகள் வழங்கப்பட்டது. வீடு சுவாரசியமாக இல்லை என்றாலோ அல்லது கேப்டனின் நிர்வாகம் சரியில்லை என்றாலோ போட்டியாளர்கள் காரணத்தை கூறி விட்டு முட்டையை எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

உரிமைக்காக, ஒடுக்குமுறைக்காக புரட்சிகள் நடப்பது இயல்பு ; Managers vs Workers - BB வீடு!

இதையடுத்து இந்த வாரத்திற்கான வீட்டுப்பணிக்கு அணிகளை பிரிக்கும் நேரம் வந்தது. 15 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் அணி பிரிப்பதில் போட்டியாளர்களிடையே பிரச்சனை முட்டிக்கொண்டது. சுத்தம் செய்யும் பணிக்கு ஆட்கள் தேவை என்று அருண் குரல் எழுப்ப, சபை கூடும் இடத்தை "நான் ரெண்டு வேளை சுத்தம் செய்தேன்” என்றார் ராணவ். ஆனால் ராணவ் பேச்சினிடையே குறுக்கிட்ட ஜெஃப்ரி ஒருமுறை clean பண்ணா போதும். எக்ஸ்ட்ராவா பண்ணது அவர் விருப்பத்தின் அடிப்படையில் என்று கூறினார். இதனிடையே குறுக்கிட்ட தீபக், Skill oriented.. Labour oriented.. என வேலைகளை பிரித்து விவரிக்க முயற்சி செய்தார். இந்த வார்த்தைகள் அருணை மிகவும் கோபமடைய செய்ததால் கூட்டத்தில் சலசலப்பு அதிகரித்தது. பேச விட்டு வேடிக்கை பார்த்து வந்த ரஞ்சித் வாக்குவாதத்தின் போதும் தனது சத்தம் வெளியே கேட்டு விடாதபடி சமரசம் செய்ய முயற்சித்தார். ஆரம்பமே அமர்களமானதால் கடுப்பான தர்ஷிகா, இவ்வளவு பிரச்சனை நடக்குது, கேப்டன் controlல எடுக்கமா வேடிக்கை பார்க்குறாங்க என்று கூறி ஒரு முட்டையை எடுத்து சென்றார்.

இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. இந்த வாரம் கேப்டனான ரஞ்சித் மற்றும் nomination free pass வென்ற மஞ்சரியை நாமினேட் செய்ய முடியாது என பிக்பாஸ் அறிவித்தார். இதையடுத்து, தர்ஷிகா, ரயான், அருண், அன்ஷிதா, விஷால், பவித்ரா, சவுந்தர்யா, ஜாக்குலின் மற்றும் சத்யா ஆகியோர் இந்த வாரத்திற்கு நாமினேட் செய்யப்பட்டனர். நாமினேட் செய்ய பயன்படுத்திய வார்த்தைகளை போட்டியாளர்கள் வாரம் முழுவதும் tag-ஆக அணிந்துகொள்ளும்படி கூறி, சௌந்தர்யாவுக்கு இம்சை ராணி, புஸ்வாணம்; சத்யாவுக்கு பயந்தாங்கொள்ளி, மிக்சர்; ஜாக்குலின்க்கு தந்திரவாதி, நடிகை ; தர்ஷிகாவுக்கு விஷப்பாம்பு, Zone out கிளி; விஷாலுக்கு சகுனி, Safe Play; அன்ஷிதாவுக்கு பச்சோந்தி, முகமூடி; பவித்ராவுக்கு பாய்சன், ஆமை; ரயானுக்கு ஊமை ராஜா, வெத்து சீன் என்ற tagகுகள் அனுப்பிவைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் shopping டாஸ்க் நடைபெற்றது. இதில் பொம்மைக்கு கண்கள், காது, மூக்கு, வாய் ஆகியவற்றை போட்டியாளர்கள் கண்களை கட்டியபடி பொம்மையின் பின்னால் நின்றுகொண்டு சரியாக பொறுத்த வேண்டும் என்பது டாஸ்க், இதில் திக்குமுக்காடி போன போட்டியாளர்கள் இறுதியாக 3000 pointsகள் பெற்று இந்த வாரத்திற்கு ஷாப்பிங் செய்தனர்.

உரிமைக்காக, ஒடுக்குமுறைக்காக புரட்சிகள் நடப்பது இயல்பு ; Managers vs Workers - BB வீடு!

ஏற்கனவே வீட்டிற்குள் Skill oriented.. Labour oriented என்ற வார்த்தைகள் சலசலப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தீபக்கும், அருணும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு முற்றுபுள்ளி வைக்க நினைத்தனர். ஆனால், இந்த பிரச்னையை இந்த வாரத்தின் ஆரம்பப்புள்ளியாக வைத்து, போட்டியாளர்களை managers, Workers என்று பிரித்து இந்த வாரத்திற்கான weekly டாஸ்கை ஆரம்பித்தார் பிக்பாஸ். அதற்கு முன்னதாக பிக்பாஸ் வீட்டின் Top 8 போட்டியாளர்கள் மற்றும் Bottom 7 போட்டியாளர்கள் யார் யார் என்று பிரிக்கும்படி அறிவிப்பு வந்தது. இதில், தீபக், விஷால், ஜாக்குலின், சௌந்தர்யா, முத்துக்குமரன், தர்ஷிகா, ஜெஃப்ரி மற்றும் மஞ்சரி ஆகியோர் டாப் 8 போட்டியாளர்களாக தேர்வாகினார். அருண், ரஞ்சித், ரயான், ராணவ், அன்ஷிதா, சத்யா மற்றும் பவித்ரா ஆகியோர் bottom 7 போட்டியாளர்களாக தேர்வாகினார்.

திடீரென பிக்பாஸ் வீட்டின் சமயலறையில் தண்ணீர் நின்றது, தொடர்ந்து கேஸும் நின்றது. அடிப்படை வசதிகளை வைத்துதான் இந்த வாரத்திக்கான manager, Workers டாஸ்க் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து nominated zone, nominated free zone என பிரிந்த பிக்பாஸ் வீட்டில் managers vs Workers task துவங்கியது. இதில் swap நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. தண்ணீர், gas, bathroom செல்வது போன்ற அத்தியாவசியங்களுக்கு employees cycle ஓட்ட வேண்டும் என்பது விதி. குறிப்பாக managers காமெராவில் அறிவிக்க அந்த Worker சைக்கிள் ஓட்ட வேண்டும். டாஸ்க் துவங்கியது, இதில் Workers, manager-களை மரியாதையுடன் அழைக்க வேண்டும், union leader தான் பேச வேண்டும், best employee தேர்ந்தெடுக்கப்படும், வேலை நிறுத்தம் செய்யக்கூடாது போன்ற சில விதிகளும் கூறப்பட்டது. இந்த டாஸ்கில் முதல் union leaderஆக அன்ஷிதா தேர்வாகி இருந்தார். டாஸ்க் இரவு வரை தொடர இந்த சீசனின் முதல் day and night டாஸ்க் இது என பிக்பாஸ் அறிவித்தார். Workers-க்கு தனியாக விடுதி ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு தரையில் உறங்க விரிப்புகளும் வழங்கப்பட்டிருந்தன. இரவிலும் சக போட்டியாளர்கள் bathroom செல்ல Workers யாரவது சைக்கிள் மிதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனால் நள்ளிரவில் தர்ஷிகாவுக்காக தூக்கத்தை தியாகம் செய்து சைக்கிள் மிதித்தார் ராணவ்.

உரிமைக்காக, ஒடுக்குமுறைக்காக புரட்சிகள் நடப்பது இயல்பு ; Managers vs Workers - BB வீடு!

வீட்டிற்குள் முதலாவது swap நடைபெற்றது. இதில் விஷால் Workers பக்கம் செல்ல, மறுபுறம் அருண் managerஆக அணி மாறினார். தொழிலார்களுக்காக தொடர்ந்து பேசி வந்த அருண் manager ஆன பிறகும் கூட, தொழிலார்களின் பக்கம் இருந்து பார்த்தால்தான் தெரியும் என்று விவாதித்துக்கொண்டிருந்தார். மறுபுறம் ஜாக்குலின் நாங்களும்தான் கஷ்டப்படறோம் என கூற, அருண் union leader மாதிரி பேசிட்டு இருக்காரு என கூறினார் மஞ்சரி. அதற்குள் மீண்டும் swap time வந்தது. தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்த அருண் மீண்டும் தொழிலார்கள் பக்கமே அனுப்பி வைக்கப்பட்டார். இந்த முறை Worker-ஆக இருந்த பவித்ரா, managerஆக promote செய்து அனுப்பிவைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக swap time வந்தது. இந்த முறை முத்து Workers பக்கம் சென்றார், அருண் மீண்டும் manager ஆனார்.

இதன்தொடர்ச்சியாக இரு அணிக்கும் இடையே மீட்டிங் நடைபெற்றது. இதில் சிறந்த employeeயாக அன்ஷிகா தேர்வு செய்யப்பட, இரண்டவது union leader ஆக ராணவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சைக்கிள் ஓட்டும் போது முத்து சக்கரத்தை சுத்தி விட்டு விளையாண்டது விபரீதத்தில் போய் முடிந்தது. Bathroom யாரும் use பண்ண கூடாது, rulesஅ follow பண்ணல என கூறினார் பிக்பாஸ். இதனால் சக போட்டியாளர்கள் கடுப்பாக, எந்த punishment நாளும் எனக்கே குடுங்க என தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார் முத்து. விளைவு சமையல் செய்யும்வரை gasகாக சைக்கிள் ஓட்டினார்.

உரிமைக்காக, ஒடுக்குமுறைக்காக புரட்சிகள் நடப்பது இயல்பு ; Managers vs Workers - BB வீடு!

டாஸ்க் இறுதிக்கட்டத்தை எட்டத் தொடங்கியது சமைப்பது போன்ற அனைத்து வேலைகளையும் Workers தான் செய்ய வேண்டும். கார்டன் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள pipe-ல் தண்ணீர் பிடித்து சென்றுதான் பாத்ரூம்க்கு பயன்படுத்த வேண்டும் போன்ற விதிகள் பிக்பாஸால் அறிவிக்கப்பட்டது. இதனிடையே மழை வர, அதனால் ஒரு பிரச்னையும் ஏற்பட்டது. மழை பெய்யும்போது குடைபிடித்துக்கொண்டு அன்ஷிதா மழையில் வந்து நின்றார். இங்கே நிற்கக்கூடாது என அன்ஷிதாவிடம் managers கூற, இது என்னோட இஷ்டம் என வாதம் செய்தார் அன்ஷிதா. இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற சௌந்தர்யா திடீரென வேகமாக வந்த அன்ஷிதாவின் குடையை பிடித்து இழுக்க இதனால் managers, workers ஆகியோரிடையே வாக்குவாதம் அதிகரித்தது ஒருகட்டத்தில் ராணவ் கை நீட்ட பேச , கையை மஞ்சரி தட்டி விட பிரச்சனை மேலும் பெரிதாகியது. இறுதியில் Workers அனைவரின் முன்னிலையில் மஞ்சரியும், சௌந்தர்யாவும்; ராணவ், அன்ஷிதா ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டனர்.

இதையடுத்து managers, Workers மீட்டிங் நடைபெற்றது. இதில் Workers தரப்பில் REIC என்ற ஒரு கோரிக்கை புதிதாக கொண்டுவரப்பட்டது. R - respect, E - equality, I - independence , C - communication. மேலும், இந்த முறை ரயான் union leader ஆக தேர்வுசெய்யப்பட்டார். தொடர்ந்து swap time வந்தது. இதில் சௌந்தர்யாவும், சத்யாவும் அணிமாறி சென்றனர். அத்துடன் ஜாக்குலின் மற்றும் தீபக் ஆகியோர் ஒரே நேரத்தில் தண்ணீர் பயன்படுத்திய காரணத்திற்காக, சொல்லாமல் பயன்படுத்திய ஜாக்குலினும் workers பக்கம் அனுப்பிவைக்கப்பட்டார். ஒரு வழியாக இந்த டாஸ்க் முடிவடைந்தது. இதில், ராணாவ் direct nomination செய்யப்பட்டார், அதேபோல, ஜெஃப்ரி nomination pass பெற்று அடுத்தவார நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து, இந்த வாரம் ஜாக்குலின், முத்துக்குமரன் மற்றும் விஷால் ஆகியோர் best performers-ஆக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராணவ், ரஞ்சித் மற்றும் பவித்ரா ஆகியோர் worst perform செய்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

உரிமைக்காக, ஒடுக்குமுறைக்காக புரட்சிகள் நடப்பது இயல்பு ; Managers vs Workers - BB வீடு!

இதனை தொடர்ந்து, "இந்த வீட்ல contestants கிட்ட இது சரி சிறப்பா பணிங்கன்னு சொன்ன அதை கொண்டாடுறாங்க, அதே நேரத்துல இது தவறுனு சொன்ன சரிய எந்த அளவுக்கு கொண்டாடுறாங்களோ, அதை விட பலமடங்கு தவற கொண்டாடுறாங்க, கேட்ட அதன் நான்னு சொல்லுறாங்க. உரிமைகளுக்காகவும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் புரட்சிகள் நடப்பது இயல்பு, ஆனா இந்த வீட்ல அதோட தேவை இருந்தந்ததா?" விசாரிப்போம் என கூறும் காட்சிகள் இன்றைய ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

- சீ. ரம்யா

banner

Related Stories

Related Stories