சினிமா

“இட்லி, சாம்பார்... எங்க இருக்க?” - அம்பானி விழாவில் ராம்சரணை அழைத்த ஷாருக்: ரசிகர்கள் கண்டனம் - பின்னணி?

அம்பானி இல்ல விழாவில் நடிகர் ராம்சரணை, ஷாருக்கான் 'இட்லி, சாம்பார்' என அழைத்து ரசிகர்கள் மத்தியில் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

“இட்லி, சாம்பார்... எங்க இருக்க?” - அம்பானி விழாவில் ராம்சரணை அழைத்த ஷாருக்: ரசிகர்கள் கண்டனம் - பின்னணி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலக பணக்காரர்களின் ஒருவரான அம்பானி, தனது மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கு ஒரு முன்னோடியாக Pre Wedding கடந்த மார்ச் 1 முதல் 3-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பில் கேட்ஸ், அதானி, மார்க் ஸுக்கர்பர்க் உள்ளிட்ட உலக பணக்காரர்கள், பாப் சிங்கர் ரிஹானா உள்ளிட்ட வெளிநாட்டு திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக், சல்மான், ஆமீர், அலியா பட், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும், தென்னிந்திய நடிகர்கள் ரஜினி, ராம் சரண், இயக்குநர் அட்லீ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சுமார் ரூ.100 கோடி அளவு செலவில் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைபிரபலங்கள் நடனமாடி மகிழ்வித்தனர்.

“இட்லி, சாம்பார்... எங்க இருக்க?” - அம்பானி விழாவில் ராம்சரணை அழைத்த ஷாருக்: ரசிகர்கள் கண்டனம் - பின்னணி?

இந்த சூழலில் நடிகர் ராம்சரணை, நடிகர் ஷாருக்கான் 'இட்லி, வடை' என்று பெயர் வைத்து அழைத்துள்ள சம்பவம் தென்னிந்திய திரை ரசிகர்கள் மத்தியில் கண்டனங்களை எழுப்பியுள்ளது. அதாவது ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான 'RRR' படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு..." பாடலுக்கு ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கான் உள்ளிட்டோர் மேடையில் நடமாடினர்.

அப்போது ராம் சரணை நடனமாடுவதற்கு மேடையில் அழைக்க "இட்லி - வடை - சாம்பார்" என்று ஷாருக்கான் பயன்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவை பிரபல அலங்கார கலைஞர் Zeba Hassan என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு ஷாருக்கை பிடிக்கும் என்றும், ஆனால் இப்படி செய்தது நன்றாக இல்லை என்றும் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார்.

“இட்லி, சாம்பார்... எங்க இருக்க?” - அம்பானி விழாவில் ராம்சரணை அழைத்த ஷாருக்: ரசிகர்கள் கண்டனம் - பின்னணி?

இதைத்தொடர்ந்து இந்த விவாகரத்திற்கு பலரும் கன்னடம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தென்னிந்திய திரைக் கலைஞர்களுக்கு பாலிவுட் மரியாதை கொடுப்பதில்லை என்றும், அங்கீகாரம் கொடுப்பதில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் அண்மையில் நடைபெற்று விருது வழங்கும் விழாவில் கூட தென்னிந்திய நடிகைகளான ராஷ்மிகா, நயன்தாரா புறக்கணிக்கப்பட்டிருந்தார்.

அப்போது இருந்து இப்போது வரையிலும் இது அரங்கேறி வரும் நிலையில், பாலிவுட் படங்களை விட தென்னிந்திய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு வெற்றி பெறுகிறது. அதே போல் பாலிவுட்டின் பெரிய ஸ்டார் படங்கள் தென்னிந்தியாவில் எவ்வளவு ப்ரோமோஷன் செய்தாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை.

முன்னதாக அட்லீ இயக்கத்தில் உருவான 'ஜவான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், காமெடி என்ற பெயரில் அட்லீயின் மனைவியை பற்றி மேடையில் ஷாருக் பேசியிருந்தது பெரும் பேசுபொருளானது. இந்த சூழலில் தென்னிந்திய நடிகரான ராம்சரணை, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இப்படி அழைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வுக்கு தென்னிந்திய ரசிகர்கள் பெரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஷாருக்கானையும் விமர்சித்து வருகின்றனர். ஷாருக் அதனை வேடிக்கையாக கூறியிருந்தாலும் கூட, ஒரு திரைக்கலைஞரை மரியாதையோடு அழைக்க வேண்டும் என்றும், இப்படி அவரது ஊர்களில் உள்ள சாப்பாடு பொருள் பற்றி கூறி அழைக்கக்கூடாது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனினும் இதுபற்றி ஷாருக்கானோ, ராம் சரணோ இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் தென்னிந்திய திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

banner

Related Stories

Related Stories