சினிமா

”அந்த நடிகர் வேறு யாருமல்ல, நான் தான்” - கலைஞருடனான அனுபவம் குறித்து ரஜினிகாந்த் நெகிழ்ச்சி !

”அந்த நடிகர் வேறு யாருமல்ல, நான் தான்” - கலைஞருடனான அனுபவம் குறித்து ரஜினிகாந்த் நெகிழ்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பிலும், திமுக சார்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திரைத்துறை சார்பிலும் கொண்டாட திட்டமிட்டு, நேற்று (06.01.2023) கொண்டாடப்பட்டது. 'கலைஞர் 100' என்ற பெயரில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நேற்று சென்னை, கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் விழா நடைபெற்றது.

இந்த கலைஞர் 100 விழாவில் திரைத்துறையினர் பலரும் கலந்துகொண்டனர். முக்கியமாக கமல், ரஜினி, வடிவேலு, சூர்யா, கார்த்தி, தனுஷ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். தொடர்ந்து இதில் பலரும் கலைஞர் குறித்து சிறப்புரை ஆற்றினர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், கலைஞர் அரசியலுக்கு வரவில்லை என்றால், இன்று பல சிவாஜி, எம்.ஜி.ஆர் உருவாகியிருப்பார்கள் என்று பெருமிதமாக தெரிவித்தார்.

இதுகுறித்து ரஜினிகாந்த் பேசியதாவது, "கலைஞர் குறித்து பேச தொடங்கினால் எங்கு ஆரம்பிப்பது? எங்கு முடிப்பது என்றே தெரியாது. அந்த அளவிற்கு அவரால் ஈர்க்கப்பட்டவர்களில் ஒருவன்தான் நான். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஒரே படத்தில் பெரிய ஸ்டாராக அறிய வைத்தவர். அதே போல் சாதாரண நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை தொடர் வெற்றி படங்களை கொடுக்க வைத்தவரும் கலைஞர்.

ஒரு வேளை கலைஞர் அரசியலுக்கு செல்லாமல் இருந்திருந்தால், இன்று தமிழ் சினிமாவில் எத்தனையோ சிவாஜி, எம்ஜிஆர்கள் உருவாகி இருப்பார். ஒருவருக்கு எழுத்தாற்றல் இருந்தால், பேச்சாற்றல் இருக்காது. ஆனால் இந்த இரண்டுமே கலைஞருக்கு இருந்தது. கலைஞர் அவர்கள் அறிஞர் சபையில் அறிஞராகவும், கவிஞர் சபையில் கவிஞராகவும் பாமரனுக்கு பாமரனாகவும் பேசுவார்.

”அந்த நடிகர் வேறு யாருமல்ல, நான் தான்” - கலைஞருடனான அனுபவம் குறித்து ரஜினிகாந்த் நெகிழ்ச்சி !

ஒரு எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர். இந்தியா முழுக்க அவருக்கு அரசியல் தொடர்பு உண்டு. கலைஞரை விமர்சிச்சே பத்திரிகை நடத்துனவரு அவரு. அவர் என்க்கிட்ட ஒரு நாள், 'கலைஞரை எவ்ளோ விமர்சனம் பண்றேன். ஆனா, எங்க பார்த்தாலும் என்னய்யா எப்படி இருக்கன்னு கேட்குறாரு...'ன்னு நெகிழ்ந்து போய் சொன்னாரு. அவர் பத்திரிகையாளர் மற்றும் என்னுடைய நண்பர் சோ.

கலைஞர் அவர்கள் வழக்கமாக ஒரு நடிகருடன் சேர்ந்து படம் பார்ப்பார். அது தேர்தல் நேரம். அந்த நடிகர் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் அவரிடம் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த நடிகர் ‘இரட்டை இலைக்கு’ என்று சொன்னது, ட்ரெண்டாகி பேசுபொருளாக மாறியது.

ஆனால் அன்று மாலையே அந்த நடிகர், கலைஞருடன் சேர்ந்து படம் பார்க்க வேண்டும். இந்த சம்பவத்தால், அவருக்கு குளிர் காய்ச்சல் என்றும், அதனால் வர முடியாது என்றும் சொல்லிவிட்டார். இருந்தாலும் சரி, அவர் வந்தே ஆக வேண்டும் என்று கலைஞர் கூறினார். பிறகு அந்த நடிகர் தியேட்டருக்கு சென்றபோது, ‘வாங்க, காய்ச்சல்ன்னு சொன்னீங்களாமே, ‘சூரியன்’ பக்கத்துல உட்காருங்க’ என்று சொன்னார். அந்த நடிகர் வேறு யாருமல்ல. நான் தான்." என்றார்.

banner

Related Stories

Related Stories