சினிமா

இயக்குநர் TO தயாரிப்பாளர்... திரைத்துறையில் புதிய அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்... குவியும் வாழ்த்துகள் !

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது திரைத்துறையில் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இயக்குநர் TO தயாரிப்பாளர்... திரைத்துறையில் புதிய அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்... குவியும் வாழ்த்துகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போது தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். குறும்படம் இயக்குநராக வெற்றிபெற்ற இவர், 2016-ல் 'அவியல்' என்ற ஆந்தோலஜி படத்தில் 'களம்’ என்ற படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து 2017-ல் வெளியான 'மாநகரம்' படம் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமானார்.

மாநகரம் திரைப்படம் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், இது அவருக்கு ஒரு நல்ல பெயரை கொடுத்தது. எனினும் 2 ஆண்டுகள் கழித்து 2019-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ரசிகர்கள் மத்தியில் யார் இந்த லோகேஷ் என்ற தேடல் உருவானது.

இயக்குநர் TO தயாரிப்பாளர்... திரைத்துறையில் புதிய அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்... குவியும் வாழ்த்துகள் !

அந்த படத்தை தொடர்ந்து அவரது அடுத்த படம் 'கைதி' படத்தின் 2-ம் பாகம் வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், மீண்டும் 2 ஆண்டுகள் கழித்து விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து ரசிகர்களை மேலும் கவர்ந்தார். அதோடு இந்த படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்...' பாடல் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

இயக்குநர் TO தயாரிப்பாளர்... திரைத்துறையில் புதிய அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்... குவியும் வாழ்த்துகள் !

இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டே கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தை இயக்கி, மேலும் பட்டிதொட்டி எங்கும் லோகேஷ் கனகராஜை தெரியாத ஆட்கள் இருக்க முடியாது என்ற அளவுக்கு பெயர் பெற்றார். பெரும் வரவேற்பை பெற்ற இந்த படமானது 'கைதி' படத்துடன் இணைந்த கதையாக அமைந்துள்ளது. இதனால் 'லோகேஷ் சினிமட்டிக் யுனிவர்ஸ்' (LCU) என்று ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.

அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படம் கூட, LCU-வின் பாகம் ஆகும். இவரது அனைத்து படங்களும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்த நிலையில், லியோ பட வெளியீட்டுக்கு முன்னர், தான் ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கவுள்ளதாக அவரே தெரிவித்திருந்தார். மேலும் அதில் தனது கனவு படமான 'இரும்பு கை மாயாவி' படத்தை நிச்சயம் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இயக்குநர் TO தயாரிப்பாளர்... திரைத்துறையில் புதிய அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்... குவியும் வாழ்த்துகள் !

இந்த நிலையில், தான் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐந்து திரைப்படங்களை தான் இயக்கிய பிறகு, தற்போது 'G Squad' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.

இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் முதலில் தனது நெருங்கிய நண்பர்களின் படங்களை தயாரித்து வழங்கவுள்ளேன். இது அவர்களுக்குள் இருக்கும் கிரியேட்டிவ் எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில் அமையும். இதற்கு ரசிகர்களின் ஆதரவும், நம்பிக்கையும் எங்களுக்கு வேண்டும். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநரில் இருந்து தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ள லோகேஷ் கனகராஜுக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விரைவில் இவர் தயாரிப்பை தொடர்ந்து நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories