சினிமா

‘பீட்சா 3 : தி மம்மி’ : 2 ஆண்டுகளுக்கு பிறகு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு !

பிட்சா 3 திரைப்படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘பீட்சா 3 : தி மம்மி’ : 2 ஆண்டுகளுக்கு பிறகு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2012-ல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் தான் 'பீட்சா'. ஹாரர் த்ரில்லராக உருவான இந்த படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. மேலும் விஜய் சேதுபதிக்கு நின்று பேசும் திரைப்படமாக உருவானது. இந்த படத்தின் ஹிட்டை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான பீட்ஸா 2-ம் உருவானது.

‘பீட்சா 3 : தி மம்மி’ : 2 ஆண்டுகளுக்கு பிறகு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு !

தீபன் சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவான பீட்சாவின் இரண்டாம் பாகத்திற்கு `வில்லா' என்று பெயர் வைக்கப்பட்டது. கடந்த 2013-ல் வெளியான இந்த படத்தில் அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்த இந்த படம் பீட்ஸா முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறு கதைக்களமாக அமைந்தது. இந்த படம் பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை என்பதால் அடுத்த பாகம் உருவாகாமலே இருந்தது.

ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு `பீட்சா 3' படம் குறித்த அப்டேட் வெளியானது. அதன்படி 'பீட்சா 3: தி மம்மி' எனப் பெயரிடப்பட்டிக்கும் இந்தப் படத்தில் நாயகனாக அஸ்வின் காக்மனு, பவித்ரா மாரிமுத்து நடிக்கின்றனர். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் 2021-ம் ஆண்டே வெளியானது. எனவே இதன் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

‘பீட்சா 3 : தி மம்மி’ : 2 ஆண்டுகளுக்கு பிறகு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு !

தொடர்ந்து இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்களை படக்குழு வெளியிடாமல் இருந்தது. மேலும் இது குறித்த அப்டேட்கள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், நேற்று இந்த படத்தின் வெளியீட்டு படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. பிட்ஸா படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த தயாரிப்பாளர் சி.வி.குமாரின் 'திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் இந்த படத்தையும் தயாரித்துள்ளது.

எனவே திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தின் வெளியீட்டு தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 28-ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் ஆவலில் இருக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories