சினிமா

“கிளாசிக் தன்மையுடன் கூடிய அரசியல் படம்..” : ‘துறமுகம்’ திரைப்படம் எப்படி இருக்கு? #MovieReview

“கிளாசிக் தன்மையுடன் கூடிய அரசியல் படம்..” : ‘துறமுகம்’ திரைப்படம் எப்படி இருக்கு? #MovieReview
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

மலையாள சினிமாவில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துறமுகம்’. முக்கியமான காரணங்கள் அப்படத்தின் இயக்குநரும் நடிகரும் கதையமைவும். துறமுகம் படத்தின் இயக்குநர் ராஜீவ் ரவி. ஏற்கனவே நகரமயமாக்கலால் தலித்கள் தங்களின் வசிப்பிடத்தை இழக்கும் நிலையை கதையாகக் கொண்ட கம்மாட்டிபாடம் படத்தை எடுத்தவர்.

துறமுகத்தின் முக்கிய பாத்திரத்தில் நிவின் பாலி நடித்திருக்கிறார். பிரேமம் படத்தில் பிரபலமாகி முன்னணி நடிகராக வருவாரென எதிர்பார்க்கப்பட்ட அவர், உடல் பெருத்து நடிக்கும் வாய்ப்பு குறைந்திருந்த நிலையில், இப்படம் மீண்டும் அவரை முன்னுக்கு கொண்டு வருமா என்கிற கேள்வி ரசிகர்களிடம் ஆர்வத்தை உருவாக்கியிருந்தது.

“கிளாசிக் தன்மையுடன் கூடிய அரசியல் படம்..” : ‘துறமுகம்’ திரைப்படம் எப்படி இருக்கு? #MovieReview

இப்படத்தின் கதையமைவு கொச்சி துறைமுகங்களில் முன்பு நடந்த ஒரு வர்க்கப் போராட்டத்தின் கதை என்பதாலும் கேரளா ஏற்கனவே பொதுவுடமை பூமி என்பதாலும் கம்மாட்டிபாடம் போன்ற ஒரு படத்தின் இயக்குநரும் ‘சகாவு’ போன்ற இடதுசாரிய படத்தில் நடித்த நிவின்பாலியும் இணைவதாலும் பொதுவுடமை அரசியல் சார்ந்தோர் மத்தியிலும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.

எப்படி இருக்கிறது ‘துறமுகம்’?

’துறமுகம்’ மலையாளப் படம் இந்த இரண்டு வகை நபர்களை முக்கிய மாந்தர்களாக கொண்டு கதையை நகர்த்துகிறது. Lumpenproletariat மற்றும் Proletariat ஆகியோர்தான் கதை மாந்தர்கள். முதல் பாத்திரத்தில் நிவின் பாலியும் இரண்டாம் பாத்திரத்தில் அர்ஜுன் அசோகனும் நடித்திருக்கிறார்கள்.

Lumpenproletariat என்ற வார்த்தையை மார்க்ஸும் எங்கெல்ஸ்ஸும்தான் பயன்படுத்தியிருந்தார்கள். அந்த வார்த்தையிலிருந்து தனியே நாம் எடுத்து பயன்படுத்தும் வார்த்தைதான் லும்பன் (Lumpen). கிட்டத்தட்ட ரவுடிகள், பொறுப்பற்றவர்கள், சமூகத்துக்கு வெளியே வாழ்பவர்கள், தான்தோன்றிகள் போன்றவர்களை குறிக்க lumpen என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறோம்.

“கிளாசிக் தன்மையுடன் கூடிய அரசியல் படம்..” : ‘துறமுகம்’ திரைப்படம் எப்படி இருக்கு? #MovieReview

Lumpenproletariat என்ற சொல்லாடலின் வழி மார்க்ஸ் குறிப்பிடுவது வர்க்க நிலையில் உழைக்கும் வர்க்கத்தில் இருந்தாலும் வர்க்க உணர்வோ அரசியலோ பெற்றிராதவர்களைத்தான். எந்த வர்க்கம் அல்லது சமூகநிலை இவர்களை ஒதுக்குகிறதோ அதோடேயே சேர்ந்து கொண்டு, அதற்கெதிராக போராடும் இவர்களின் சொந்த வர்க்கத்தினரை எதிர்ப்பார்கள். எனவே அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தினனாக இருப்பான். ஆனால் உழைக்கும் வர்க்க அரசியலில்லாதவனாக இருப்பான்.

கொச்சியின் மட்டஞ்சேரி துறைமுகத்தில் சுதந்திரப் போராட்ட காலக்கட்டத்தில் நடந்த காவல்துறை ஒடுக்குமுறை சம்பவத்தை நோக்கி செல்லும் கதையாக துறமுகம் படம் கோர்க்கப்பட்டிருக்கிறது.

துறைமுகத்தில் கூலி வேலை தரும் ஊர் பெரியவர்கள், உடைமையாளர்கள் வேலைக்காக வந்து குழுமியிருக்கும் தொழிலாளர் கூட்டத்தில் டோக்கன்களை தூக்கி எறியும். தொழிலாளர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டு டோக்கனை கையகப்படுத்துவார்கள். டோக்கன் இருப்பவர்களுக்கு அன்றைய வேலை தரப்படும். இம்முறையை ‘சப்பா’ முறை என அழைக்கின்றனர்.

“கிளாசிக் தன்மையுடன் கூடிய அரசியல் படம்..” : ‘துறமுகம்’ திரைப்படம் எப்படி இருக்கு? #MovieReview

அன்றாட உழைப்பு முடிந்த பிறகு, தொழிலாளர்களின் வருமானத்தை குறைக்கும் அல்லது தன் பக்கம் ஈர்க்கும் நோக்கத்தோடு மது, மல்யுத்தம் என ஏதோவொரு பொழுதுபோக்குக்கு அவர்களை தூண்டி விட்டு, காசை மீண்டும் பெற்று விடுகின்றனர் முதலாளிகள். சுதந்திரத்துக்கு பின்னர், சங்கத்துக்கான இடதுசாரி அரசியல் வெடித்தெழுந்ததும் தொழிலாளருக்கான சங்கமென ஒரு சங்கத்தை முதலாளிகளே உருவாக்கிக் கொள்கின்றனர். சப்பா முறை தொடர்கிறது.

இவை எல்லாவற்றையும் தாண்டி மக்களின் உரிமைகளுக்காக போராடும் அரசியலுக்கு அர்ஜுன் அசோகன் போகிறார். நிவின் பாலி, முதலாளிகளின் ஏவல் நாயாக மாறுகிறார். இருவரும் ஒரே வீட்டை சேர்ந்தவர்கள். சகோதரர்கள். வீட்டில் இருக்கும் பெண்களும் அங்கிருக்கும் சூழலால் அவதிப்படுகின்றனர். ஆனால் நிவின் பாலி பொருட்படுத்தவில்லை. ஒரு கட்டத்தில் சகோதரனையே நோக்கி கத்தி எடுக்கும் நிலையில் நிவின் பாலி நிற்கிறார். இன்னொரு கட்டத்தில் நிவின் பாலியையே கொல்லும் இடத்திற்கு முதலாளி வருகிறேன். ஒரு அமைப்பின் இரு பக்கங்களாகவும் இருவரும் மாறுகின்றனர்.

“கிளாசிக் தன்மையுடன் கூடிய அரசியல் படம்..” : ‘துறமுகம்’ திரைப்படம் எப்படி இருக்கு? #MovieReview

இறுதிக்காட்சியில் இருவரும் இரு வேறு இடங்களில் கொல்லப்பட்டு வீழ்கின்றனர். ஒருவர், மது திருடச் சென்று சாகிறார். இன்னொருவர் செங்கொடி ஏந்தி சாகிறார். மதுவுக்காக செத்தவரின் வாழ்க்கை மரணத்துடன் முடிகிறது. செங்கொடி ஏந்தி செத்தவரின் வாழ்க்கை மரணத்துக்கு பின்னும் தொடர்ந்து வரலாற்றில் சப்பா முறையை ஒழிக்கிறது.

அரசியலற்ற கோபம், முரட்டுத்தனம்! வர்க்க உணர்வற்ற அறிவு, வீண்!

வரலாறையும் அரசியலையும் வர்க்க உணர்வையும் மறுத்து அரசியலிலும் குடும்பத்திலும் சமூகத்திலும் வாழ்விலும் படைப்பிலும் லும்பனிசத்தை முன்நிறுத்தும் இன்றைய சூழலில், ‘மறதி என்பது ஒரு கல்லறை’ என்ற எச்சரிக்கை பாடலுடன் படத்தை முடித்து வைக்கிறார் இயக்குநர் ராஜீவ் ரவி. சற்று தொய்வாக படம் இருந்தாலும் படத்தின் சூழல் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. கிளாசிக் தன்மையுடன் கூடிய இடதுசாரிய அரசியல் படத்த பார்க்க விரும்புவருக்கு சரியான படம் இது. SonyLiv-ல் இப்படம் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories