சினிமா

பறக்கவிடும் ஜீப்: “நா செஞ்சா மக்கள் ஏத்துக்கமாட்டாங்க.. ஆனா இவரு செஞ்சா..” - பாலய்யா குறித்து ரஜினி கலகல!

நானோ, ஷாருக்கானோ, சல்மான் கானோ ஜீப்பை பறக்கவிட்டால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஆனால் பாலய்யா செஞ்சா மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என NTR நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார்

பறக்கவிடும் ஜீப்: “நா செஞ்சா மக்கள் ஏத்துக்கமாட்டாங்க.. ஆனா இவரு செஞ்சா..” - பாலய்யா குறித்து ரஜினி கலகல!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தெலுங்குவில் மறைந்த மூத்த நடிகர்களில் ஒருவர்தான் NT ராமராவ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் ஆவர். இவர் தொடங்கிய கட்சிதான் தெலுங்கு தேசம் கட்சி. தற்போது இந்த கட்சியின் தலைவராக ஆந்திர முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு இருக்கிறார்.

பறக்கவிடும் ஜீப்: “நா செஞ்சா மக்கள் ஏத்துக்கமாட்டாங்க.. ஆனா இவரு செஞ்சா..” - பாலய்யா குறித்து ரஜினி கலகல!

இந்த நிலையில் NT ராமராவுக்கு ஆந்திராவில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி நேற்று விஜயவாடாவில் நடைபெற்றது. என்.டி ராமராவ் குடும்பத்தினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் ஒன்றிய அமைச்சர் புரந்தரேஸ்வரி, என்டி ராமராவின் மகன் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பறக்கவிடும் ஜீப்: “நா செஞ்சா மக்கள் ஏத்துக்கமாட்டாங்க.. ஆனா இவரு செஞ்சா..” - பாலய்யா குறித்து ரஜினி கலகல!

மேலும் இதற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது மேடையில் பாலய்யாவுக்கு தெலுங்கு மொழியிலே புகழாரம் சூட்டினார் நடிகர் ரஜினி. பாலய்யா அவர் பேசுகையில், "என்.டி.ராமராவ்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவரது பக்தி படங்கள் பலவற்றைப் பார்த்தேன். குருச்சேத்திரா நாடகத்தில் துரியோதனாக என்.டி.ஆர் மாதிரியே காப்பி அடித்து நடித்தேன். ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். நண்பர்கள் நீயும் சினிமா நடிகன் ஆகிவிடு.

பறக்கவிடும் ஜீப்: “நா செஞ்சா மக்கள் ஏத்துக்கமாட்டாங்க.. ஆனா இவரு செஞ்சா..” - பாலய்யா குறித்து ரஜினி கலகல!

தெலுங்கில் ராஜினாலா, முக்காமலா மாதிரி பெரிய வில்லனாக வருவாய் என்று கூறினார்கள். அதுதான் நடிகனாக வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் உருவாக்கியது. எனது நண்பர் பாலய்யா பார்வையாலே கொல்லுகிறார். பாலய்யா ஒரு தட்டு தட்டினாலே ஜீப் பறக்கும். அதை நானோ, சல்மான் கானோ, ஷாருக் கானோ, அமிதாப் பச்சனோ செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பறக்கவிடும் ஜீப்: “நா செஞ்சா மக்கள் ஏத்துக்கமாட்டாங்க.. ஆனா இவரு செஞ்சா..” - பாலய்யா குறித்து ரஜினி கலகல!

ஆனால் பாலய்யா செய்தால் ஒத்துக்கொள்வார்கள். ஏனென்றால் மக்கள் அவரை பாலய்யாவாக மட்டும் பார்க்கவில்லை. என்.டி ராமாராவாக பார்க்கின்றனர். அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து பல சாதனைகளை நிகழ்த்த வேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்கிறேன்." என்று பேசினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பாலய்யா ரசிகர்கள் மத்தியில் கொண்டாப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories