சினிமா

’ரம்மி நாயகன்’.. கூச்சலிட்ட ரசிகர்கள்: பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் கடுப்பான சரத்குமார்!

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் "ரம்மி நாயகன் என நடிகர் சரத்குமாரை பார்த்து பத்திரிக்கையாளர்கள் கூச்சலிட்டனர்.

’ரம்மி நாயகன்’.. கூச்சலிட்ட ரசிகர்கள்: பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் கடுப்பான சரத்குமார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழில் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் சரத்குமார். 90-களில் மிகவும் பிரபலமான கதாநாயகனாக நடித்த இவர், தற்போதும் தனது நடிப்புத் திறமையால் இந்திய சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். கதாநாயகனாக, வில்லனாக, அப்பவாக, முக்கிய கதாபாத்திரம் உட்பட பல ரோலில் நடித்து வருகிறார்.

அண்மையில் வெளியான 'பொன்னியின் செல்வன் 1' படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடிகை ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் பிரபலமானார். இவர் படங்களில் மட்டுமல்லாமல், சீரிஸ், விளம்பரம் உள்ளிட்டவற்றிலும் நடித்து வருகிறார்.

’ரம்மி நாயகன்’.. கூச்சலிட்ட ரசிகர்கள்: பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவில் கடுப்பான சரத்குமார்!

இந்நிலையில் நேற்று பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அவர் உள்ளே வந்து கொண்டிருந்த போது அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் பலரும் 'ரம்மி நாயகன், ரம்மி நாயகன்' என கூச்சலிட்டனர்.

இதனால் அவரது முகம் கடுகடுத்தது. பிறகு கோவத்துடனே அங்கிருந்து வேகவேகமாக நகர்ந்து சென்றார். ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டால் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இதனால் இந்த விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு கூட ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை மசோதாவைச் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்துள்ளது. இப்படி எல்லோரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்து மக்களின் உயிரைக் காப்பாற்ற முயன்று வருகின்றனர்.

இப்படி இருக்கும்போது, ரம்மி விளையாட அறிவு வேண்டும் எனவும், அது ஒரு அறிவுப்பூர்வமான விளையாட்டு என நடிகர் சரத்குமார் அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்தது பெரிய சர்ச்சையானது. மேலும் நான் ரம்மி விளையாடச் சொன்னால் மட்டும் விளையாடி விடுவார்களா ? என மற்றொரு பேட்டியில் புலம்பினார்.

இந்நிலையில்தான், நேற்று நடந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டபோது அவரை பார்த்து பத்திரிக்கையாளர்கள் 'ரம்மி நாயகன்' என கூச்சலிட்டுள்ளனர். நடிகர் சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories