சினிமா

சிம்புவுடன் நேரடியாக மோதும் நானி.. வெல்லப்போவது பத்து தலயா? ஒத்த தலயா? - இந்த வாரம் வெளியாகும் படங்கள் !

சிம்புவுடன் நேரடியாக மோதும் நானி.. வெல்லப்போவது பத்து தலயா? ஒத்த தலயா? - இந்த வாரம் வெளியாகும் படங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தற்போதுள்ள காலகட்டத்தில் பல்வேறு மொழிப்படங்களையும் மக்கள் ரசிக்கிறார்கள். உலகம் முழுக்க நாள்தோறும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும் குறைந்தது ஒரு படமாவது வெளியாகும். அந்த வகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு திரைப்படம் வெளியானால், கூடவே இன்னும் ஒரு படமாவது வெளியாகும்.

அந்த வகையில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு திரையரங்கு முதல் ஓடிடி வரை சுமார் 11 படங்கள் வெளியானது. அதில் உதயநிதியின் குறிப்பாக கண்ணை நம்பாதே, காஜல் அகர்வால், யோகிபாபு நடித்த கோஷ்டி, 'குடிமகன்', 'D3', 'ராஜா மகள்', ஹாலிவுட் படமான ஷசாம் உள்ளிட்ட படங்கள் திரையரங்கில் வெளியானது.

சிம்புவுடன் நேரடியாக மோதும் நானி.. வெல்லப்போவது பத்து தலயா? ஒத்த தலயா? - இந்த வாரம் வெளியாகும் படங்கள் !

இந்த நிலையில் இந்த வாரம் திரையரங்குகளில் சில திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. அதன் பட்டியல் இதோ :-

30 மார்ச் :

பத்து தல - ஓபிலி என். கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி, டிஜே அருணாசலம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 30-ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சிம்புவுடன் நேரடியாக மோதும் நானி.. வெல்லப்போவது பத்து தலயா? ஒத்த தலயா? - இந்த வாரம் வெளியாகும் படங்கள் !

30 மார்ச் :

தசரா - அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சிம்புவுடன் நேரடியாக மோதும் நானி.. வெல்லப்போவது பத்து தலயா? ஒத்த தலயா? - இந்த வாரம் வெளியாகும் படங்கள் !

30 மார்ச் :

Bholaa (இந்தி) - கார்த்தியின் கைதி படத்தின் ரீமேக்கான இந்த படத்தை பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ளார். இந்த படம் மார்ச் 30-ம் தேதி இந்தியில் வெளியாகிறது.

சிம்புவுடன் நேரடியாக மோதும் நானி.. வெல்லப்போவது பத்து தலயா? ஒத்த தலயா? - இந்த வாரம் வெளியாகும் படங்கள் !

31 மார்ச் :

விடுதலை 1 - வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதையானது தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 31-ம் தேதி விடுதலை - 1 படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

சிம்புவுடன் நேரடியாக மோதும் நானி.. வெல்லப்போவது பத்து தலயா? ஒத்த தலயா? - இந்த வாரம் வெளியாகும் படங்கள் !

31 மார்ச் :

Dungeons and Dragons: Honor Among Thieves - ஹாலிவுட் படமான இந்த படம் English, தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ளது.

சிம்புவுடன் நேரடியாக மோதும் நானி.. வெல்லப்போவது பத்து தலயா? ஒத்த தலயா? - இந்த வாரம் வெளியாகும் படங்கள் !

31 மார்ச் :

யோசி - ஸ்டீபன் ஜொசப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் அபினய் சங்கர், ரேவதி வெங்கட், ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories