சினிமா

1800களில் உடன்கட்டையை எதிர்த்து கேள்வி கேட்ட வேதநாயகத்துக்கும், விஜய் ஆண்டனிக்கும் இப்படி ஒரு உறவா ?

பிரபல நாவல் எழுத்தாளரான வேதநாயகம் பிள்ளை குறித்து திமுக எம்.பி., ஆ.ராசா பெருமையாக பேசியுள்ள வீடியோவை இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

1800களில் உடன்கட்டையை எதிர்த்து கேள்வி கேட்ட வேதநாயகத்துக்கும், விஜய் ஆண்டனிக்கும் இப்படி ஒரு உறவா ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் பெண்களை அடக்கி வைத்திருந்த காலகட்டத்தில் பல கொடுமைகள் பெண்கள் அனுபவித்து வந்தனர். அதில் இன்றியமையாததுதான் குழந்தை திருமணம் மற்றும் சதி. குழந்தை திருமணம் என்பது சிறுமிகள் பொம்மை வைத்து விளையாடும் காலத்தில், அவர்கள் கழுத்துக்கு தாலி கட்டி, கையில் சமையல் பொருட்களை கொடுத்து மற்றொருவர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவர்.

அதேபோல் சதி என்று சொல்லப்படும் உடன்கட்டை ஏறும் பழக்கமும் இருந்துள்ளது. அதாவது கணவன் இறந்த பின்னர் மனைவி (எத்தனை வயதில் இருந்தாலும்) கணவரை எரிக்கும் அதே தீயில் மனைவியும் எரிந்து தனது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும். இதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், உறவினர்கள் கட்டாயப்படுத்தி தீயில் தள்ளி விடுவர்.

1800களில் உடன்கட்டையை எதிர்த்து கேள்வி கேட்ட வேதநாயகத்துக்கும், விஜய் ஆண்டனிக்கும் இப்படி ஒரு உறவா ?

இவைகள் மிகவும் கொடுமையானவையாக அப்போது தெரிந்தாலும், யாரும் இதுகுறித்து குரல் எழுப்ப தயங்கினர். அப்போதே இதுகுறித்து குரல் எழுப்பியவர்தான் வேதநாயகம் பிள்ளை. இவர் குறித்து சமீபத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மேடையில் பேசினார்.

அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு எம்.பி ஒருவர் நன்றியுரையை தொடக்கி வைத்தார். அப்போது அவர் சொல்கிறார், இந்த புண்ணிய பூமியில் இருக்கும் கோயில்கள் எல்லாம் நமது பெருமை மிகு அடையாளங்கள்.. இராமாயணம், மகாபாரதம் நமது அடையாளங்கள்.. சரி இருந்து விட்டு போகட்டும் என்று விட்டுவிட்டோம். ஆனால் அடுத்து சொன்னார் பாருங்கள், கணவர் இறந்து விட்டால், அதே தீயில் தன்னை மறித்துகொள்கின்ற கற்புள்ள பெண்கள் வாழ்ந்த நாடு இது என்றார்.

1800களில் உடன்கட்டையை எதிர்த்து கேள்வி கேட்ட வேதநாயகத்துக்கும், விஜய் ஆண்டனிக்கும் இப்படி ஒரு உறவா ?

வேறு யாரும் எதுவும் கேட்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களான நாங்கள்தான் தட்டி கேட்டோம். ஏன் இந்தியாவில் இருக்கும் மற்ற எம்.பி-களுக்கு சதி மீது வெறுப்பு வரவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு திராவிட கொள்கை தெரியாது; பெண்ணுரிமை தத்துவம் தெரியாது. இந்த மண் எவ்வளவு பெருமை மிக்க மண் என்பதை நம் பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 1851-லேயே மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்பவர் எழுதியதுதான் 'பொம்மை கல்யாணம்'

இவர்தான் முதன்முதலில் தமிழில் நாவல் கொண்டு வந்தவர். அந்த பொம்மை கல்யாணம் நாவலில் 7 வயது சிறுமிக்கு திருமணம் நிச்சயமாகிறது. அப்போது அந்த சிறுமி தனது அம்மாவிடம் கல்யாணம் என்றால் என்ன? அப்போது சிறுமியின் தாய் கூறுகிறார், அப்படி என்றால், உனக்கும் ஒரு ஆணுக்கும் கல்யாணம் நடக்கும்.. நீ அவருக்கும், அவர் உனக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். காலை எழுந்ததும், அவரது காலில் விழுந்து வணங்க வேண்டும்.

1800களில் உடன்கட்டையை எதிர்த்து கேள்வி கேட்ட வேதநாயகத்துக்கும், விஜய் ஆண்டனிக்கும் இப்படி ஒரு உறவா ?

அவருக்கு வேண்டியவற்றை செய்ய வேண்டும். பணிவிடை செய்ய வேண்டும். இப்படி எல்லாம் செய்தால், நமக்கு நல்லது என்கிறார். மீண்டும் அந்த சிறுமி வேறு என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, அவரது தாயார் அளிக்கும் பதில் அப்படி தூய்மையான பெண்ணாக இருந்து, ஒருவேளை கணவர் இறந்து போனால், அந்த நெருப்பிலேயே நீயும் விழுந்து செத்து போய்டனும் என்கிறார்.

உடனே அந்த சிறுமி பதில் கேள்வி கேட்கிறார், ‘ஒருவேளை நான் செத்து போய்ட்டா, நான் எரிந்துபோகும்போது அவரும் விழுந்து இறந்து விடுவாரா?’ என்று. 1851-லேயே இப்படி ஒரு வசனத்தை எழுதி திராவிட சிந்தனையை விதைத்தவர் வேதநாயகம் பிள்ளை. ஆனால் இப்போது 170 ஆண்டுகளுக்கு பின்னர், நாடாளுமன்றத்தில் ஒருவர் கணவர் இறந்துபோனால், மனைவியும் இறந்துபோவதை புனிதம் என்று பேசுகிறார் என்றால், நாடாளுமன்றத்தை முடக்கும் முதல் வேலையை முதலமைச்சரின் தம்பிகள் நாங்கள் செய்வோம்" என்றார்.

இது தொடர்பான வீடியோவை இயக்குநரும், நடிகருமான நவீன், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் "மாயவரம் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை.. இப்படிப்பட்ட ஒரு புரட்சியாளரின் பேரன் என்பதைவிட பெரிய பெருமை உங்களுக்கு வேறு என்ன வேண்டும் தோழர் விஜய் ஆண்டனி" என்று குறிப்பிட்டுள்ளார்.

1800களில் உடன்கட்டையை எதிர்த்து கேள்வி கேட்ட வேதநாயகத்துக்கும், விஜய் ஆண்டனிக்கும் இப்படி ஒரு உறவா ?

ஆம், அந்த வேதநாயகம் பிள்ளை வேறு யாருமில்லை, இன்று இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகத்தன்மை கொண்டு விளங்கும் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா ஆவார். நவீனின் இந்த பதிவுக்கு விஜய் ஆண்டனி நன்றி தெரிவித்துள்ளார்.

1800களில் உடன்கட்டையை எதிர்த்து கேள்வி கேட்ட வேதநாயகத்துக்கும், விஜய் ஆண்டனிக்கும் இப்படி ஒரு உறவா ?

யார் இந்த வேதநாயகம் பிள்ளை ?

தற்போதுள்ள காலகட்டத்தில் பல சிறுகதை எழுத்தாளர்கள், நாவல் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என உருவாகியுள்ளனர். ஆனால் சுமார் 1800-களிலே தமிழ்நாட்டில் மிகப்பெரிய நாவல் எழுத்தாளராக இருந்தவர்தான் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை.

1826-ல் திருச்சியில் பிறந்த இவர், முற்போக்கு எழுத்தாளராக அறியப்பட்ட இவர் சுமார் 16 நூல்கள் எழுதியுள்ளார். வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன. தமிழ் கவிதையில் இந்த பாணி ஒரு புதிய உத்தியாக, முதல் முயற்சியாக கருதப்படுகிறது

1800களில் உடன்கட்டையை எதிர்த்து கேள்வி கேட்ட வேதநாயகத்துக்கும், விஜய் ஆண்டனிக்கும் இப்படி ஒரு உறவா ?

'பிரதாப முதலியார் சரித்திரம்' என்னும் நாவலே தமிழில் வெளியான முதல் நாவல் ஆகும். இதனை எழுதியவர் வேதநாயகம் ஆவார். இவர் எழுதிய அனைத்து புத்தகங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர் எழுதிய மற்றொரு புதினமான (நாவல்) 'பொம்மை கல்யாணம்' மேலும் வரவேற்பை பெற்றது.

குழந்தை திருமணம் பற்றி பேசியிருக்கும் இந்த புதினம், சதி என்று சொல்லப்படும் உடன்கட்டை ஏறுவது குறித்தும் பேசியுள்ளது. இந்த நாவல் அன்றைய காலம் மட்டுமின்றி, இன்றும் நிலைநின்றுள்ளது. 1829-ல் தனது 62 வயதில் உயிரிழந்தார். இப்படிபட்ட ஒரு மனிதர் நடிகர் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

Related Stories

Related Stories