சினிமா

Miss World TO OSCAR.. 60 வயதில் ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசிய பெண்.. Action நடிகைக்கு குவியும் வாழ்த்து!

Everything Everywhere All at Once என்ற படத்துக்கான சிறந்த நடிகை விருதை வென்றார் 60 வயது சீன நடிகையான மிசெல் இயோ.

Miss World TO OSCAR.. 60 வயதில் ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசிய பெண்.. Action நடிகைக்கு குவியும் வாழ்த்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆண்டுதோறும் திரைத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் உலகம் முழுவதுமுள்ள சிறந்த பாடல்கள், திரைப்படங்கள், நடிகர்கள் என அனைவரும் போட்டியிட்டு விருதுகள் வழங்கப்படும்.

Miss World TO OSCAR.. 60 வயதில் ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசிய பெண்.. Action நடிகைக்கு குவியும் வாழ்த்து!

அதில் இந்த ஆண்டு சிறந்த பாடலுக்கான விருதை RRR படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு" பாடல் வென்றுள்ளது. ஆஸ்கர் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர்.

Miss World TO OSCAR.. 60 வயதில் ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசிய பெண்.. Action நடிகைக்கு குவியும் வாழ்த்து!

அதேபோல் மொத்தம் 11 விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்த `Everything Everywhere All At Once' திரைப்படம் சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.

Miss World TO OSCAR.. 60 வயதில் ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசிய பெண்.. Action நடிகைக்கு குவியும் வாழ்த்து!

Everything Everywhere All At Once என்ற படத்தில் நடித்த நடிகையான மிசெல் இயோ (michelle yeoh) முதல் முறை ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். இதன்மூலம் இவர்தான் ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசிய பெண் நடிகை ஆவார். மலேசியாவை சேர்ந்த மிசெல் இயோ, பிரபல மாடல் அழகியாக இருந்த இவர், கடந்த 1983-ல் 'Miss World Malaysia' பட்டத்தை வென்றார்.

Miss World TO OSCAR.. 60 வயதில் ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசிய பெண்.. Action நடிகைக்கு குவியும் வாழ்த்து!

தொடர்ந்து 1984-ல் இருந்தே படங்களில் நடிக்க தொடங்கி விட்டார். தொடர்ந்து சீன படங்களில் நடித்து வந்த இவர், ஜாக்கி சானுடன் 'போலீஸ் ஸ்டோரி 3' படத்திலும் நடித்துள்ளார். அதன்பிறகும் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த இவர், 'மம்மி படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்தார். மேலும் மார்வெல் யுனிவெர்சில் வரும் 'ஷாங் சி' படத்திலும் நடித்துள்ளார்.

Miss World TO OSCAR.. 60 வயதில் ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசிய பெண்.. Action நடிகைக்கு குவியும் வாழ்த்து!

அதோடு அண்மையில் வெளியான 'அவதார்' படத்தின் அடுத்த பாகம் - அவதார் 3 மற்றும் 4 படங்களிலும் நடித்து வருகிறார். தொடந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் இவருக்கு தற்போது 60 வயதாகிறது. இந்த நிலையில் இவர் தற்போது இந்தாண்டு நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருதை 'Everything Everywhere All at Once' என்ற படத்தின் சிறந்த நடிகை பிரிவில் வென்றுள்ளார்.

விருதை பெற்ற பின் மேடையில் பேசிய மிசெல் இயோ, "இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற சிறுவர், சிறுமிகள் அனைவருக்கும் நம்பிக்கை, சாத்தியம் இவற்றின் சான்று தான் இந்த விருது. பெரிய கனவுகளைக் காணுங்கள், அந்த கனவுகள் நனவாகும் என்பதற்கு இது ஒரு சான்று. என்னுடன் பணியாற்றி அனைவரும் நன்றி.

Miss World TO OSCAR.. 60 வயதில் ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசிய பெண்.. Action நடிகைக்கு குவியும் வாழ்த்து!

இந்த விருதினை நான் எனது அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன். உலகில் உள்ள அனைத்து அம்மாக்களும் உண்மையில் சூப்பர் ஹீரோக்கள் தான். அவர்கள் இல்லாமல் நாங்கள் யாரும் இங்கு இருக்க மாட்டோம். இது எனது குடும்பத்தாருக்கும் நான் சமர்ப்பிக்கிறேன். பெண்களே, உங்கள் வயது கடந்துவிட்டது என்று யாரும் சொல்ல அனுமதிக்காதீர்கள்." என்றார்.

banner

Related Stories

Related Stories