சினிமா

“என்ன பாலிவுட்டா..?” - Oscar விருதில் RRR படத்தை ‘பாலிவுட்’ என்று சொன்ன தொகுப்பாளர்: கொந்தளித்த ரசிகர்கள்

“என்ன பாலிவுட்டா..?” - Oscar விருதில் RRR படத்தை ‘பாலிவுட்’ என்று சொன்ன தொகுப்பாளர்: கொந்தளித்த ரசிகர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆண்டுதோறும் திரைத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருதுகள் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் உலகம் முழுவதுமுள்ள சிறந்த பாடல்கள், திரைப்படங்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு விருதுகள் வழங்கப்படும்.

“என்ன பாலிவுட்டா..?” - Oscar விருதில் RRR படத்தை ‘பாலிவுட்’ என்று சொன்ன தொகுப்பாளர்: கொந்தளித்த ரசிகர்கள்

அதில் இந்த ஆண்டு சிறந்த பாடலுக்கான விருதை RRR படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு" பாடல் வென்றுள்ளது. ஆஸ்கர் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர்.

“என்ன பாலிவுட்டா..?” - Oscar விருதில் RRR படத்தை ‘பாலிவுட்’ என்று சொன்ன தொகுப்பாளர்: கொந்தளித்த ரசிகர்கள்

இந்த பாடலுக்கு கிடைக்கப்பட்ட இந்த விருது மூலம் ஆஸ்கர் வென்ற முதல் இந்திய பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் இந்த பாடலுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் இந்த பாடல் ஆஸ்கர் மேடையில் அரங்கேற்றப்பட்டது. இந்த பாடலுக்கு அந்நாட்டு நடனக்குழு நடனமாடினர். அப்போது இந்த விழாவை தொகுத்து வழங்கும் ஜிம்மி கிம்மெல், ராஜமெளலியின் RRR படத்தை "பாலிவுட் படம்" என்று அழைத்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கண்டனங்களை எழுப்பி வருகிறது. ஏனெனில் RRR படமானது தெலுங்கு படமாகும். இது பான் இந்தியா படமாக தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இருப்பினும் இந்த படத்தின் ஒரிஜினல் மேக்கிங் தெலுங்கு மொழி ஆகும்.

இவ்வளவு ஏன், ஆஸ்கரில் கூட தெலுங்கு 'நாட்டு நாட்டு' பாடல்தான் பரிந்துரை செய்யப்பட்டு விருதையும் வென்றுள்ளது. அப்படி இருக்கையில் இவர் இதனை பாலிவுட் என்று அழைத்திருப்பது பல்வேறு கண்டங்களை எழுப்பி வருகிறது. ஏனெனில் பொதுவாக இந்திய சினிமா என்றால் பாலிவுட் என்றுதான் உலகம் முழுவதும் ஒரு பிம்பம் உள்ளது.

இந்த நிலையில் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய திரைப்பட பாடலில் தென்னிந்திய படமானது தென்னிந்தியாவுக்கு, தெலுங்கு திரையுலகுக்கு கிடைத்த வரலாற்றுமிக்க மரியாதை. ஆனால் அவர் அதனை பாலிவுட் படம் என்று அழைத்திருப்பது தெலுங்கு திரை ரசிகர்கள், தென்னிந்திய திரை ரசிகர்கள் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories