சினிமா

“Mighty Valiant Saga..” - இணையத்தில் வைரலாகும் 'SURIYA 42' மாஸ் Update.. டைட்டில் Glimpse எப்போது ?

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் நாளை மறுநாள் (14.03.2023) வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

“Mighty Valiant Saga..” - இணையத்தில் வைரலாகும் 'SURIYA 42' மாஸ் Update.. டைட்டில் Glimpse எப்போது ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குறிப்பாக பெண்கள் ரசிகர்கள் இவருக்கு ஏராளமானோர் உள்ளனர். இவரது நடிப்பில் தயாரிப்பில் கடந்த 2021-ல் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் பெரிய அளவு வெற்றி பெற்றது.

“Mighty Valiant Saga..” - இணையத்தில் வைரலாகும் 'SURIYA 42' மாஸ் Update.. டைட்டில் Glimpse எப்போது ?

நேரடியாக ஓடிடி தளத்தில் இறங்கிய இந்த படம், சர்ச்சைகளுக்கு உள்ளானாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவரது நடிப்பில் தியேட்டரில் வெளியான திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. வசூல் ரீதியாக வெற்றி பெற்ற இந்த படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.

“Mighty Valiant Saga..” - இணையத்தில் வைரலாகும் 'SURIYA 42' மாஸ் Update.. டைட்டில் Glimpse எப்போது ?

இதையடுத்து கடந்த ஆண்டு வெளியான விக்ரம் படத்தின் மாஸ் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை மிரள வைத்தார். 'ரோலக்ஸ்' என்ற கதாபாத்திரம் மூலம் 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்'-ல் இணைந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் ஒரு மாஸ் என்ட்ரி கொடுத்த இவரது அடுத்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், 'சூர்யா 42' போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

“Mighty Valiant Saga..” - இணையத்தில் வைரலாகும் 'SURIYA 42' மாஸ் Update.. டைட்டில் Glimpse எப்போது ?

அப்போதிலிருந்தே 'சூர்யா 42' ஒரு வரலாற்று படம் என்றும், அது பொன்னியின் செல்வன் போல் வரலாற்றை தழுவி எடுக்கப்படவுள்ளது என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பினர். சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

“Mighty Valiant Saga..” - இணையத்தில் வைரலாகும் 'SURIYA 42' மாஸ் Update.. டைட்டில் Glimpse எப்போது ?

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். பான் இந்தியா படமாக எடுக்கப்படும் இந்த படமானது சுமார் 10 மொழிகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 3D-ல் எடுக்கப்படும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“Mighty Valiant Saga..” - இணையத்தில் வைரலாகும் 'SURIYA 42' மாஸ் Update.. டைட்டில் Glimpse எப்போது ?

இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்கியதாக சூர்யா கடந்த ஆண்டே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து பெரிதாக இந்த படத்தின் எந்த அப்டேடும் வெளியாகாத நிலையில், தற்போது இதன் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் கிலிம்ஸ் நாளை மறுநாள் (14.03.2023) வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அந்த போஸ்டரில் ‘Mighty Valiant Saga’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு அர்த்தம் என்னவென்றால் ”வலிமை மிக்க வீரம் மிக்க சரித்திரம்” என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இது ஒரு சரித்திர கதையாக இருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

“Mighty Valiant Saga..” - இணையத்தில் வைரலாகும் 'SURIYA 42' மாஸ் Update.. டைட்டில் Glimpse எப்போது ?

இதன் படப்பிடிப்பு கோவா மற்றும் பிஜு தீவில் நிறைவடைந்ததை தொடர்ந்து விரைவில் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ‘சூர்யா 42’ படத்தினை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் நடந்த 'விடுதலை' டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் அடுத்ததாக 'வாடிவாசல்' படத்தை துவங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories