சினிமா

“அவரது உழைப்பால்தான் முதலமைச்சர் ஆகியிருக்கிறார்” -முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த நடிகை சங்கீதா!

ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளை மதிக்க கற்றுக்கொடுங்கள் என திமுக நிகழ்ச்சியில் நடிகை சங்கீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“அவரது உழைப்பால்தான் முதலமைச்சர் ஆகியிருக்கிறார்” -முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த நடிகை சங்கீதா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி திமுக சார்பாக பல்வேறு மாவட்டங்களிலும், பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை துறைமுகம் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

“அவரது உழைப்பால்தான் முதலமைச்சர் ஆகியிருக்கிறார்” -முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த நடிகை சங்கீதா!

இந்த நிகழ்வில் அமைச்சர் செஞ்சி.கே. மஸ்தான், மேயர் பிரியா, நடிகை சங்கீதா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகை சங்கீதா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வெகு விமர்சையாக பாராட்டினார்.

தொடர்ந்து மேடையில் பேசிய அவர், "சினிமாவில் கேமரா முன் நடிக்க சொன்னால் தைரியமாக நடிப்பேன், எதற்கும் பயப்பட மாட்டேன் என்று அனைவரும் என்னை சொல்வார்கள். ஆனால் அரசியல் மேடையில் பெரிய பெரிய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவர் முன்பு பேசுவது கொஞ்சம் பதற்றமாக தான் இருக்கிறது.

“அவரது உழைப்பால்தான் முதலமைச்சர் ஆகியிருக்கிறார்” -முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த நடிகை சங்கீதா!

அரசியல் என்பதே புனிதமான வார்த்தை; சுயநலமாக இல்லாமல் மற்றவர்களுக்காக செய்யும் பணி. அந்த குணமே கடவுளுக்கு சமமானது. அதனை காலம் காலமாக செய்கிறார்கள். அதனாலேயே இங்கிருப்பவர்கள் மீது அதிக மரியாதை இருக்கிறது. ஆனால் தற்போது அரசியல் என்பது கேலி வார்த்தை ஆகி விட்டது. அந்த மாதிரியான நிலைக்கு காரணம், சிலர் அதை கேலி செய்வது தான்.

இவர்கள் செய்யும் சேவையை நிம்மதியாக செய்ய விட்டாலே போதும். நான் யாரையும் தனிப்பட்டு குறிப்பிடவில்லை. சிலர் ஒருவரை கேலி செய்வதை வைத்து தங்களை அடையாளப் படுத்துகிறார்கள். மற்றவர்களை கேலி செய்வதினால் அவர்கள் அடையாளம் வளரும் என்று எண்ணுகிறார்கள். இது மிகவும் கேவலமானது.

“அவரது உழைப்பால்தான் முதலமைச்சர் ஆகியிருக்கிறார்” -முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த நடிகை சங்கீதா!

அண்ணன் சேகர்பாபு சொன்னார்கள், முதலமைச்சர் நாள் ஒன்றுக்கு 90 நிகழ்ச்சிகள் செய்வார் என்று. நமக்கு 1 முதல் 90 வரை எண்ண வேண்டுமானாலே 5 நிமிடம் தேவைப்படும். ஆனால் நம் மக்கள் முதலமைச்சர் 1 மாதத்துக்கு 90 நிகழ்ச்சிகள் செய்கிறார்கள்.

அண்ணன் சேகர்பாபு மீது எனக்கு அதிக மரியாதையை உண்டு. அரசியல் என்றாலே பயமும், கூச்சமும் இருக்கும். ஆனால் அண்ணன் சேகர்பாபு அழைத்தால் எந்த நிகழ்ச்சிக்கு வேண்டுமானாலும் வருவேன். அண்ணன் அழைத்தால் மட்டும் தைரியம் எங்கிருந்து வருது என்று தெரியவில்லை.

“அவரது உழைப்பால்தான் முதலமைச்சர் ஆகியிருக்கிறார்” -முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த நடிகை சங்கீதா!

மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்கிறார்கள். அண்மையில் கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி கண்காட்சிக்கு அழைத்து சென்றார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. அடிப்படை தொண்டர் தொடங்கி இளைஞரணி செயலாளர், பொருளாளர், தலைவர், இப்போது முதலமைச்சர் என்று மு.க.ஸ்டாலின் வளர்ந்துள்ளார்.

“அவரது உழைப்பால்தான் முதலமைச்சர் ஆகியிருக்கிறார்” -முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த நடிகை சங்கீதா!

முதலமைச்சர் ஸ்டாலின் அரசியலில் பெரிய தலைவர். அவரது அரசியல் பயணம் குறித்து ஒரு கண்காட்சியில் பார்க்க முடிந்தது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்போது அவரது உழைப்பால் முதலமைச்சராகி இருக்கிறார். இன்னாரின் மகன் என்பதால் அங்கு சென்று அமரவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினின் வளர்ச்சிக்கு அவரின் உழைப்புதான் காரணம்.

“அவரது உழைப்பால்தான் முதலமைச்சர் ஆகியிருக்கிறார்” -முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த நடிகை சங்கீதா!

ஒரு பெண்ணாக எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அதிகரித்து இருக்கிறது. கவுன்சிலர்கள் முதல் மேயர் வரை பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போது இங்கே மேயராக பிரியா இருக்கிறார். அவர் காரில் வந்து இறங்கும் போது பார்ப்பதற்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.

“அவரது உழைப்பால்தான் முதலமைச்சர் ஆகியிருக்கிறார்” -முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த நடிகை சங்கீதா!

நிறைய பெண்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்.. அதனால் என்னுடைய ஒரு சிறிய வேண்டுகோளை உங்களிடம் சொல்கிறேன். பெண்களுக்கு அதிக பொறுப்புகள் இருக்கிறது. நாம்தான் நமது பிள்ளைகளை வளர்க்கிறோம். எனவே அவர்களுக்கு தைரியம் கொடுத்து வளருங்கள்.

பெண் பிள்ளைகளுக்கு தைரியத்தை கொடுங்கள்; ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளை மரியாதையாக நடத்த கற்றுக்கொடுங்கள். நானும் என் பிள்ளைக்கு அதை தான் சொல்லி வளர்க்கிறேன்" என்றார்.

நடிகை சங்கீதா அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படத்தில் விஜய்க்கு அண்ணியாக நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் எந்த அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுக்கும் சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

Related Stories