சினிமா

“நான் கல்வி அமைச்சரானால்.. சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வேன்”-வாத்தி பட இயக்குநர் சர்ச்சை பேச்சு

தான் ஒன்றிய கல்வி அமைச்சரானால், சாதி ரீதியான இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்வேன் என வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“நான் கல்வி அமைச்சரானால்.. சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வேன்”-வாத்தி பட இயக்குநர் சர்ச்சை பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் தனுஷ். தனது தனித்திறமையினால் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த இவர், ஒரு நடிகர் மட்டுமல்லாது; தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகரும் ஆவார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், தமிழ் மட்டுமல்லாமல், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தற்போது அவர் நடித்திருக்கும் படம்தான் வாத்தி. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

“நான் கல்வி அமைச்சரானால்.. சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வேன்”-வாத்தி பட இயக்குநர் சர்ச்சை பேச்சு

இன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் தனுஷ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கல்வியில் நடக்கும் வியாபார அரசியல் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் அதிக கட்டண வசூல் பற்றியும் இந்த திரைப்படம் பேசியுள்ள இந்த படம் திரை ரசிகர்கள் மத்தியிலும் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது.

முன்னதாக இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக இந்த படத்தின் நடித்த நடிகர்கள், நடிகை, இயக்குநர் ஆகியோர் பேட்டி அளித்து வந்தனர்.

“நான் கல்வி அமைச்சரானால்.. சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வேன்”-வாத்தி பட இயக்குநர் சர்ச்சை பேச்சு

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாத்தி படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி தனியார் Youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது நீங்கள் ஒன்றிய அமைச்சரானால் என்ன செய்வீர்கள் என்று நெறியாளர் கேள்வி கேட்டார். அதற்கு வெங்கி அட்லூரி சர்ச்சைக்குரிய வகையில் பதில் ஒன்றை அளித்துள்ளார்.

“நான் கல்வி அமைச்சரானால்.. சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வேன்”-வாத்தி பட இயக்குநர் சர்ச்சை பேச்சு

இது குறித்து பதிலளித்த அவர், " நான் கல்வி ஒன்றிய அமைச்சரானால் முதலில் சாதி வாரியான இட ஒதுக்கீட்டு முறையை ஒழிப்பேன். அதற்கு பதிலாக பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவேன்" என்றார். இவரது இந்த பதில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் சாதி ரீதியான இட ஒதுக்கீடு என்பது ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், உயர வேண்டும் என்பதற்கு கொண்டு வந்தது. இன்னமும் குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த மக்கள் கல்வி அறிவிலும், பொருளாதார சூழலிலும் மேலே வரவில்லை என்பதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் சாதி ரீதியான இட ஒதுக்கீடு முறையை ஆதரிக்கிறது.

“நான் கல்வி அமைச்சரானால்.. சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வேன்”-வாத்தி பட இயக்குநர் சர்ச்சை பேச்சு

மேலும் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரம் என்பது நிரந்தரம் இல்லை என்பதாலும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த முறையை அமல்படுத்தவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இட ஒதுக்கீடு முறையை ஒன்றிய கல்வி அமைச்சராக இருந்தால் ரத்து செய்ய முடியாது. இதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்த பின்னே, சட்டமாக இயற்றப்படும்.

ஆனால் இவை ஏதும் அறியாமல் மைக் என்று கிடைத்துவிட்டால் என்ன வேண்டுமென்றாலும் பேசலாமா என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இவரது இந்த பேச்சு தற்போது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories