சினிமா

“தவறாக நடந்துகொண்டார்.. நா தமிழ் சினிமாவை விட்டு வந்தததே இவரால்தான்..” - அண்ணாத்த பட நடிகை பரபர புகார் !

தனது முதல் தமிழ் படத்தில் வில்லனாக நடித்தவர், தன்னிடம் தவறாக ந்டந்துகொண்டாதாக பிரபல மலையாள நடிகை அஞ்சலி நாயர் குற்றம்சாட்டியுள்ளார்.

“தவறாக நடந்துகொண்டார்.. நா தமிழ் சினிமாவை விட்டு வந்தததே இவரால்தான்..” - அண்ணாத்த பட நடிகை பரபர புகார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மலையாள திரையுலகில் பல நடிகைகள் உள்ளனர். அதில் முக்கியமான ஒரு நடிகைதான் அஞ்சலி நாயர். 1994-ல் மலையாள படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், அதன்பிறகு மலையாளத்தில் கல்லூரி மாணவியாக நடித்தார். தொடர்ந்து தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான 'நெல்லு' என்ற படத்தின் மூலம் கதையாகியாக அறிமுகமானார்.

அதன்பிறகு தமிழில் தொடர்ச்சியாக 3 படங்களில் நடித்தார். பின்னர் மீண்டும் மலையாள திரையில் மட்டுமே தோன்றிய இவர், 2014-ம் ஆண்டு தமிழில் 2 படங்கள் நடித்தார். பின்னர் தொடர்ச்சியாக மலையாள படங்களில் மட்டுமே நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2021-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' படத்தில் மீண்டும் தோன்றினார்.

“தவறாக நடந்துகொண்டார்.. நா தமிழ் சினிமாவை விட்டு வந்தததே இவரால்தான்..” - அண்ணாத்த பட நடிகை பரபர புகார் !

அதில் ரஜினி சிறுவயதாக இருக்கும்போது, அவருக்கு அம்மாவாக நடித்திருப்பார். தற்போது தொடர்ச்சியாக மலையாள திரைப்படத்தில் நடித்து வரும் இவர், தமிழ் சினிமாவில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'Flowers Oru Kodi' என்ற நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டார். அப்போது இவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "நான் தமிழ் சரளமாக பேசக்கூடிய ஒரு பெண். எனக்கு தமிழ் சினிமாவில் அதிகமான படங்கள் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.

“தவறாக நடந்துகொண்டார்.. நா தமிழ் சினிமாவை விட்டு வந்தததே இவரால்தான்..” - அண்ணாத்த பட நடிகை பரபர புகார் !

எனது முதல் படம் 2009-ம் ஆண்டு வெளியானது. அப்போது அதில் வில்லன் நடிகர் ஒருவர் நடித்திருந்தார். அவர்தான் அந்த படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்தார். அவர் அப்போது என்னிடம் அவரது காதலை கூறி ஏற்குமாறு வற்புறுத்தினார்.

மேலும் ஷூட்டிங் இல்லாத சமயத்திலும் என்னை வெளியே செல்ல அனுமதிக்காமல் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். நான் அவரை நிராகரித்தபோதும், அவர் என்னை பின்தொடர்வதை விடவில்லை. ஒரு முறை நான் இரயிலில் செல்வதை அறிந்த அவர், அங்கும் என்னை வந்து தொந்தரவு செய்தார்.

“தவறாக நடந்துகொண்டார்.. நா தமிழ் சினிமாவை விட்டு வந்தததே இவரால்தான்..” - அண்ணாத்த பட நடிகை பரபர புகார் !

அதுமட்டுமின்றி என்னை ஓடும் இரயிலில் இருந்து கீழே தள்ளிவிடவும் பார்த்தார். அப்போது என்னிடம் இருந்து எனது பேக்கை பறித்தும் சென்றார். ஒருமுறை அவரது சகோதரிகள், தனது அண்ணன் வீட்டில் இல்லை என்று கூறி அந்த பேக்கை நேரில் வந்து வங்கிக்கொள்ளுமாறு அழைத்தனர். நானும் அதனை நம்பி சென்றேன்.

அப்போது நான் உள்ளே சென்றபோது, என்னை உள்ளே வைத்து கதவை பூட்டி விட்டனர். பின்னர் அந்த வில்லன் வந்து என்னிடம் கத்தியை காட்டி மிரட்டி சில பாத்திரங்களில் கையெழுத்து வங்கினார். மேலும் என்னிடம் இருந்து காதல் கடிதமும் எழுதி வாங்கினார். தொடர்ந்து நான் அவரை ஏமாற்றி அவரது மொபைல் போனில் இருந்து எனது அம்மாவுக்கு மறைமுக சிக்னல் கொடுத்தேன்.

“தவறாக நடந்துகொண்டார்.. நா தமிழ் சினிமாவை விட்டு வந்தததே இவரால்தான்..” - அண்ணாத்த பட நடிகை பரபர புகார் !

பின்னர் அவர் நான் இருக்கும் இடம் தெரிந்து குழுவினருடன் வந்து என்னை மீட்டனர். ஆனால் அதற்குள்ளும் அவர் தப்பித்து விட்டார். இப்படி தொடர்ச்சியாக என்னை அவர் தொந்தரவு செய்தார். இதனாலே நான் தமிழ் சினிமாவை விட்டு கேரளவுக்கே மீண்டும் வந்தேன்" என்றார். எனினும் யார் அந்த நடிகர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் அவர் தெரிவிக்கவில்லை. இவரது இந்த புகார் தற்போது திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தவறாக நடந்துகொண்டார்.. நா தமிழ் சினிமாவை விட்டு வந்தததே இவரால்தான்..” - அண்ணாத்த பட நடிகை பரபர புகார் !

அஞ்சலி நாயர் கடந்த 2011-ம் ஆண்டு அனீஷ் என்ற இயக்குனரை திருமணம் செய்தார். பின்னர் இவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் துணை இயக்குனராக இருக்கும் அஜித் என்பவரை திருமணம் செய்தார். தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும் இவர் 1 தமிழ் படம் உட்பட 16 படங்கள் தனது கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

Related Stories