சினிமா

பொம்மை நாயகி : “இதுக்காக நான் ரோடு ரோடா அலைஞ்சிருக்கேன்..” - நடிகர் யோகி பாபு உருக்கம் !

தான் என்றும் ஒரு காமெடி நடிகர் தான் என்று நடிகர் யோகி பாபு பொம்மை நாயகி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.

பொம்மை நாயகி : “இதுக்காக நான் ரோடு ரோடா அலைஞ்சிருக்கேன்..” - நடிகர் யோகி பாபு உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2009-ம் ஆண்டு தமிழில் வெளியான 'யோகி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாபு. அது இவருக்கு கைகொடுக்க, திரை வட்டாரத்தில் யோகி பாபு என்று அழைக்கப்பட்டு வருகிற. அதன்பின்னர் சில படங்களில் நடித்திருந்தாலும் 'யாமிருக்க பயமே' படத்தில் 'பன்னி மூஞ்சுவாயனாக நடித்து மிகவும் பிரபலமானார்.

அதை தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோலில் நடித்து வந்த இவர், முதல் முறையாக 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் நயன்தாரவுக்கு இணையாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அது மாஸ் ஹிட் கொடுக்க, அதன்பின்னர் இயக்குநர் அஸ்வின் இயக்கத்தில் வெளியான 'மண்டேலா' படத்தில் முழுக்க முழுக்க கதாநாயகனாக நடித்து மாபெரும் வரவேற்பை பெற்றார்.

பொம்மை நாயகி : “இதுக்காக நான் ரோடு ரோடா அலைஞ்சிருக்கேன்..” - நடிகர் யோகி பாபு உருக்கம் !

நடிப்பில் முழுக்க முழுக்க பிசியாக இருக்கும் இவர், தற்போது சுமார் 20 படங்கள் தனது கைவசம் வைத்துள்ளார். அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலும் கிச்சா என்ற காமெடி ரோலில் நடித்திருந்தார். தொடர்ந்து அயலான், சலூன், பூமர் அங்கிள், சதுரங்க வேட்டை 2 என தொடர் படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் யோகி பாபு, பேபி ஸ்ரீமதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள பொம்மை நாயகி (Bommai Nayagi) படம் வரும் 3-ம் தேதி வெளியாகிவுள்ளது. இயக்குநர் ஷான் இயக்கத்தில் உருவான இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

பொம்மை நாயகி : “இதுக்காக நான் ரோடு ரோடா அலைஞ்சிருக்கேன்..” - நடிகர் யோகி பாபு உருக்கம் !

இந்த நிலையில் இன்று பொம்மை நாயகி படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் யோகி பாபு, ஷான், பா. ரஞ்சித் என படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய நடிகர் யோகி பாபு படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் தான் முன்பாக அட்டக்கத்தி படத்தில் நடிக்கவே தனக்கு கால் ஷீட் இல்லை என்றும் சிரித்து கொண்டே கூறினார்.

பொம்மை நாயகி : “இதுக்காக நான் ரோடு ரோடா அலைஞ்சிருக்கேன்..” - நடிகர் யோகி பாபு உருக்கம் !

தொடர்ந்து பேசிய அவர், "எல்லா மேடைகளிலும் என்னை நான் காமெடியன் என சொல்வதற்கு காரணம், அதுதான் என் தொழில்; நான் ஒரு காமெடியன் ஆகவேண்டும் என்பதற்காகதான் தெரு தெருவாக வாய்ப்பு தேடி அலைந்தேன். பலரும் என் முகத்தை கிண்டல் செய்துள்ளனர்.

பொம்மை நாயகி : “இதுக்காக நான் ரோடு ரோடா அலைஞ்சிருக்கேன்..” - நடிகர் யோகி பாபு உருக்கம் !

மேக்கப் போடும்போது திட்டியுள்ளனர். இதெல்லாம் எல்லா நடிகர்களுக்கும் நடப்பதுதான், எனக்கு கொஞ்சம் அதிகமாகவே நடந்துள்ளது. எப்பவுமே என் முகம் ஜோக்கர் முகம்தான். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் எந்த சினிமாவுக்கு சென்றாலும் நான் ஒரு காமெடியன்தான்." என்றார்.

banner

Related Stories

Related Stories