சினிமா

விரைவில் உருவாகும் சுந்தர் சி-யின் அரண்மனை 4.. கதாநாயகனாக இந்த நடிகரா ? - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

சுந்தர் சியின் அரண்மனை 4-ம் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் உருவாகும் சுந்தர் சி-யின் அரண்மனை 4.. கதாநாயகனாக இந்த நடிகரா ? - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான முதல் ஹாரர் படம்தான் அரண்மனை. 2014-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சுந்தர் சி, சந்தானம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இப்படத்தை தொடர்ந்து இதன் அடுத்த பாகம் எடுக்கப்பட்டது.

விரைவில் உருவாகும் சுந்தர் சி-யின் அரண்மனை 4.. கதாநாயகனாக இந்த நடிகரா ? - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

அதன்படி 2 ஆண்டுகள் கழித்து 2016-ம் ஆண்டு வெளியான அரண்மனை 2 படத்தில் ஹன்சிகா, சித்தார்த், திரிஷா, சுந்தர் சி, பூனம் பாஜ்வா, சூரி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெரிதளவு வெற்றி பெறவில்லை என்றாலும் குடும்பங்கள் கொண்டாடும் படமாகவே இது கருதப்பட்டது.

விரைவில் உருவாகும் சுந்தர் சி-யின் அரண்மனை 4.. கதாநாயகனாக இந்த நடிகரா ? - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

பின்னர் இதன் அடுத்த பாகமாக கடந்த 2021-ம் ஆண்டு அரண்மனை 3 வெளியானது. அந்த படத்தில் ராஷி கண்ணா, ஆர்யா, சுந்தர் சி, ஆண்ட்ரியா, விவேக், சம்பத் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

விரைவில் உருவாகும் சுந்தர் சி-யின் அரண்மனை 4.. கதாநாயகனாக இந்த நடிகரா ? - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

இந்த நிலையில் தற்போது அரண்மனை 4-ம் பாகம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதோடு இந்த படத்தில் விஜய் சேதுபதி, பிரியா பவானி சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சுந்தர் சி - தலைநகரம் 2, வல்லான், ஒன் டு ஒன் ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது அரண்மனை படத்தின் அடுத்த பாகம் குறித்து வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories