சினிமா

“அடக்குமுறை, ஆணாதிக்கம், வன்முறை..” - நாயகி மீண்டு வந்தது எப்படி ? - 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' ஒரு பார்வை !

சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மலையாளப் படம் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஒரு பார்வை

“அடக்குமுறை, ஆணாதிக்கம், வன்முறை..” - நாயகி மீண்டு வந்தது எப்படி ? - 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' ஒரு பார்வை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மலையாளப் படம் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே.

மலையாளத் திரையுலகில் சமீப மாதங்களில் பெண் விடுதலை சார்ந்த முற்போக்கு திரைப்படங்கள் பல வெளியாகி வருகின்றன. கிரேட் இந்தியன் கிச்சன் தொடங்கி வைத்த இந்த மரபில் ஜோ அண்ட் ஜோ, அர்ச்சனா 31 நாட் அவுட், குமாரி, திங்கழ்சா நிச்சயம் என்ற பட்டியலில் சேர்ந்திருக்கும் இன்னொரு படம்தான் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே.

“அடக்குமுறை, ஆணாதிக்கம், வன்முறை..” - நாயகி மீண்டு வந்தது எப்படி ? - 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' ஒரு பார்வை !

பெண் விடுதலை என்றாலும் ஆணுக்கு நிகர் பெண், பெண்ணால் எதுவும் முடியும் போன்ற லிபரல்வாத பெண்ணியம் பேசாமல், பெண் மீதான ஒடுக்குமுறைக்கு காரணமாக இருக்கும் குடும்பம், ஆணாதிக்கம், உறவுகள், சாதி, திருமணம் போன்ற சமூக நிறுவனங்களை அசைத்துப் பார்க்கும் ஆழமான கதைகள் கற்பனையாக அல்லாமல் இயல்பு வாழ்க்கையிலிருந்து எடுத்து கையாளப்படுவதே மலையாள சினிமாவின் வெற்றிக்குக் காரணமாகும்.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் ஒரு சமூகம் எப்படி இயல்பாகவே பெண்ணுக்கு எதிராக இயங்க பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது எந்தவித பிரசாரமும் இன்றி நகைச்சுவையோடு ரசிக்கும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது.

“அடக்குமுறை, ஆணாதிக்கம், வன்முறை..” - நாயகி மீண்டு வந்தது எப்படி ? - 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' ஒரு பார்வை !

ஜெயா வீட்டில் அப்பா, அம்மா, அண்ணன் உண்டு. பெற்றோர் ஜெயாவை வளர்ப்பதிலும் அண்ணனை வளர்ப்பதிலும் வித்தியாசம் காட்டுகின்றனர். அந்த வித்தியாசம் மேலோட்டமாக பார்த்தால் தெரியாது. சற்றே ஆழ்ந்து கவனித்தால் புலப்படும் வகையில் இருக்கிறது. பள்ளிப் படிப்பு முடித்து பக்கத்து நகரத்துக்கு சென்று மானுடவியல் படிக்க விரும்புகிறாள். அப்பா, அம்மாவுடன் தாய்மாமனும் சேர்ந்து கொண்டு உள்ளூரில் படித்தாலே போதும் என முடிவு செய்து ஜெயாவை உள்ளூரில் படிக்க வைக்கின்றனர்.

“அடக்குமுறை, ஆணாதிக்கம், வன்முறை..” - நாயகி மீண்டு வந்தது எப்படி ? - 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' ஒரு பார்வை !

ஜெயா படிக்கும் கல்லூரியில் ஒரு பேராசிரியர் இருக்கிறார். முற்போக்காக பேசுகிறார். பெண் விடுதலை சார்ந்தும் பேசுகிறார். ஒடுக்கப்படும் சூழலில் வளரும் ஜெயாவுக்கு பேராசிரியர் மீது காதல் உருவாகிறது. இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர். பேராசிரியரின் சாயம் வெளுக்கத் தொடங்குகிறது. ‘ஏன் இத்தனை நேரம் செல்பேசியில் பேசுகிறாய்’ என்பது தொடங்கி ஜெயாவின் சிந்தனை மற்றும் விருப்பங்களுக்கு தடைகள் ஏற்படுத்தி ஒடுக்கி, ஒரு கட்டத்தில் கை ஓங்கி அடித்தும் விடுகிறார். அதோடு அந்த உறவு முறிகிறது. சிக்கல் என்னவெனில் அந்த உறவு வீட்டுக்கு தெரிந்து விடுகிறது. எனவே குடும்பத்தார் அவசர அவசரமாக ஜெயாவை திருமணம் செய்து கொடுக்கின்றனர்.

“அடக்குமுறை, ஆணாதிக்கம், வன்முறை..” - நாயகி மீண்டு வந்தது எப்படி ? - 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' ஒரு பார்வை !

திருமணம் செய்து கொண்டவன் வீட்டில் கண்ணாடி உடைந்திருக்கிறது. டிவி ரிமோட் உடைந்து ரப்பர் பேண்ட் சுற்றப்பட்டிருக்கிறது. முதலில் அவன் இயல்பாக இருக்கிறான். அவனுக்கு பிடித்தம் இல்லாத உணவை ஜெயா தெரியாமல் சமைக்கும் ஒரு நாளில் அவன் கோபப்பட்டு அவளை அடித்து விடுகிறான். நாளடைவில் அடிப்பது அவனது வாடிக்கையாகி விடுகிறது.

“அடக்குமுறை, ஆணாதிக்கம், வன்முறை..” - நாயகி மீண்டு வந்தது எப்படி ? - 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' ஒரு பார்வை !

விரும்பாத வாழ்க்கை, குடும்ப வன்முறை, மன அழுத்தம், சுதந்திரமின்மை போன்றவற்றுக்குள் உழலும் ஜெயா, தனக்கான விடுதலையை அடைய என்ன செய்கிறாள் என்பதே மிச்சப் படம்.

ஒரு நகைச்சுவை படமாக சுருங்கிவிடக் கூடிய அத்தனை வாய்ப்பு இருந்தும் கதைக்களம் நழுவிடாமல் குடும்பம், பெண்ணுக்கான விடுதலை என எல்லா முக்கிய தளங்களிலும் பயணித்து படம் ஜெயித்திருக்கிறது.

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் படம் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories