சினிமா

துணிவு: “ஒரு மணி நேரத்துக்கு ஒன்னு..” மை பா முதல் கண்மணி வரை.. அப்போ அஜித் பெயர்? - கதாபாத்திர பட்டியல்..

தங்கள் படங்களில் உள்ள கதாபாத்திரப்பட்டியலை வெளியிட்டுள்ளது துணிவு படக்குழு.

துணிவு: “ஒரு மணி நேரத்துக்கு ஒன்னு..” மை பா முதல் கண்மணி வரை.. அப்போ அஜித் பெயர்? - கதாபாத்திர பட்டியல்..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் குமார் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம்தான் 'துணிவு'. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' என இரு படங்கள் வெளியான நிலையில், தற்போது இவர்களது கூட்டணி மூன்றாம் முறையாக இணைந்துள்ளது.

அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வைசாக் பாடலசரியாக உள்ளார்.

துணிவு: “ஒரு மணி நேரத்துக்கு ஒன்னு..” மை பா முதல் கண்மணி வரை.. அப்போ அஜித் பெயர்? - கதாபாத்திர பட்டியல்..

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் பண்டிகையை ஒட்டி விஜய் - அஜித் படம் நேருக்கு நேர் மோதுகிறது. அந்த வகையில் தற்போது விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் போட்டிபோடும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு பக்கம் துணிவு.. மறுபக்கம் வாரிசு.. என போட்டிபோட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு அப்டேட்களை இரண்டு படக்குழுவினரும் வாரிவாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் துணிவின் 'சில்லா சில்லா' பாடல் வெளியாகும் என துணிவு குழுவினர் அறிவித்த நிலையில், வாரிசின் 'ரஞ்சிதமே..' பாடல் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

துணிவு: “ஒரு மணி நேரத்துக்கு ஒன்னு..” மை பா முதல் கண்மணி வரை.. அப்போ அஜித் பெயர்? - கதாபாத்திர பட்டியல்..

பின்னர் அனிருத் பாடியுள்ள 'சில்லா சில்லா' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வாரிசின் அடுத்த பாடலான 'தீ..' பாடல் வெளியாகி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், துணிவு படத்தின் இரண்டாம் பாடலான 'காசேதான் கடவுளடா..' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இது வெளியாகி இரண்டு நாளில் வாரிசின் மூன்றாம் பாடலான 'அம்மா..' பாடல் வெளியாகியது.தொடர்ந்து வாரிசு படம் தனது ஆடியோ லான்ச்சை மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் அதிகமான சுவாரஸ்யங்கள் அரங்கேறியது. மேலும் ஆடியோ வெளியீடு துவங்குவதற்கு முன்பே, விஜய் ரசிகர்கள் - அஜித் ரசிகர்களை தாக்கி பேனர் ஒன்றை தூக்கி பிடித்தனர்.

துணிவு: “ஒரு மணி நேரத்துக்கு ஒன்னு..” மை பா முதல் கண்மணி வரை.. அப்போ அஜித் பெயர்? - கதாபாத்திர பட்டியல்..

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை வெறுப்பேத்த, உடனே அவர்களும் அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக மற்றொரு பேனரையும் அடித்தனர். வாரிசு இசை வெளியீடு முடிந்த அடுத்த நாளே, துணிவின் மூன்றாம் பாடலான 'Gangstaa' பாடல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது துணிவு படக்குழு, படத்தின் ப்ரோமோஷனுக்காக வேற லெவல் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். அதன்படி வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் குழுவினர் துபாயில் விமானத்தில் இருந்து குதித்து அந்தரத்தில் பறந்தபடி துணிவு பட போஸ்டரை பறக்கவிட்டனர். அதோடு வாரிசு மற்றும் துணிவு குழு தங்கள் படத்தின் ட்ரைலரை இந்தாண்டு இறுதி, அதாவது வரும் 31-ம் தேதி வெளியிடவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.

இருப்பினும் தங்கள் படங்களின் அப்டேட்டை ரசிகர்களுக்கு போட்டிபோட்டு முண்டியடித்து வழங்கி வருகிறது இரு படக்குழுவினரும். அந்த வகையில் நேற்று "Revealing Something Exciting From The World of THUNIVU Tomorrow" என்று அறிவித்திருந்தது. இதற்காக என்ன அப்டேட் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது அப்படைத்தின் கதாபாத்திரங்களை வெளியிட்டு வருகிறது படக்குழு.

துணிவு: “ஒரு மணி நேரத்துக்கு ஒன்னு..” மை பா முதல் கண்மணி வரை.. அப்போ அஜித் பெயர்? - கதாபாத்திர பட்டியல்..

தமிழ் சினிமாவில், இதுபோன்று படம் வெளியாகும் முன்பு எந்த நடிகர்கள் என்ன கதாபாத்திரங்கள் என்று ஒவொன்றாக வெளியிட்டது மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்'. தற்போது துணிவு அதே போல் எந்த நடிகர்கள் என்ன கதாபாத்திரங்கள் என்று வெளியிட்டு வருகிறது.

அதாவது காலை 10.15 மணிக்கு தொடங்கி ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒவ்வொரு கதாபாத்திரத்தை வெளியிட்டு வருகிறது. அதில்,

>> மோகன சுந்தரம் - மை பா

>> பிரேம் - பிரேம்

>> Bucks - ராஜேஷ்

>> ஜான் கோக்கன் - கிரிஷ்

>> வீரா - ராதா

>> சி.எம்.சுந்தர் - முத்தழகன்

>> அஜய் - ராமச்சந்திரன்

>> சமுத்திரக்கனி - தயாளன்

>> மஞ்சு வாரியர் - கண்மணி

>> அஜித் குமார் ?

    banner

    Related Stories

    Related Stories