சினிமா

துணிவு ப்ரோமோஷனுக்காக துணிவோடு களமிறங்கிய படக்குழு.. SKY DIVING மூலம் வேற லெவலில் விளம்பரம் ! VIDEO

துணிவு ப்ரோமோஷனுக்காக துணிவோடு களமிறங்கிய படக்குழு.. SKY DIVING மூலம் வேற லெவலில் விளம்பரம் ! VIDEO
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் குமார் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம்தான் 'துணிவு'. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' என இரு படங்கள் வெளியான நிலையில், தற்போது இவர்களது கூட்டணி மூன்றாம் முறையாக இணைந்துள்ளது.

அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வைசாக் பாடலசரியாக உள்ளார்.

துணிவு ப்ரோமோஷனுக்காக துணிவோடு களமிறங்கிய படக்குழு.. SKY DIVING மூலம் வேற லெவலில் விளம்பரம் ! VIDEO

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் பண்டிகையை ஒட்டி விஜய் - அஜித் படம் நேருக்கு நேர் மோதுகிறது. அந்த வகையில் தற்போது விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் போட்டிபோடும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு பக்கம் துணிவு.. மறுபக்கம் வாரிசு.. என போட்டிபோட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு அப்டேட்களை இரண்டு படக்குழுவினரும் வாரிவாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் துணிவின் 'சில்லா சில்லா' பாடல் வெளியாகும் என துணிவு குழுவினர் அறிவித்த நிலையில், வாரிசின் 'ரஞ்சிதமே..' பாடல் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

துணிவு ப்ரோமோஷனுக்காக துணிவோடு களமிறங்கிய படக்குழு.. SKY DIVING மூலம் வேற லெவலில் விளம்பரம் ! VIDEO

பின்னர் கடந்த 9-ம் அனிருத் பாடியுள்ள 'சில்லா சில்லா' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வாரிசின் அடுத்த பாடலான 'தீ..' பாடல் வெளியாகி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், துணிவு படத்தின் இரண்டாம் பாடலான 'காசேதான் கடவுளடா..' பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

துணிவு ப்ரோமோஷனுக்காக துணிவோடு களமிறங்கிய படக்குழு.. SKY DIVING மூலம் வேற லெவலில் விளம்பரம் ! VIDEO

இது வெளியாகி இரண்டு நாளில் வாரிசின் மூன்றாம் பாடலான 'அம்மா..' பாடல் வெளியாகியது.தொடர்ந்து வாரிசு படம் தனது ஆடியோ லான்ச்சை மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் அதிகமான சுவாரஸ்யங்கள் அரங்கேறியது. மேலும் ஆடியோ வெளியீடு துவங்குவதற்கு முன்பே, விஜய் ரசிகர்கள் - அஜித் ரசிகர்களை தாக்கி பேனர் ஒன்றை தூக்கி பிடித்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை வெறுப்பேத்த, உடனே அவர்களும் அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக மற்றொரு பேனரையும் அடித்தனர். வாரிசு இசை வெளியீடு முடிந்த அடுத்த நாளே, துணிவின் மூன்றாம் பாடலான 'Gangstaa' பாடல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது துணிவு படக்குழு, படத்தின் ப்ரோமோஷனுக்காக வேற லெவல் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். அதன்படி வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் குழுவினர் துபாயில் விமானத்தில் இருந்து குதித்து அந்தரத்தில் பறந்தபடி துணிவு பட போஸ்டரை பறக்கவிட்டுள்ளனர்.

துணிவு ப்ரோமோஷனுக்காக துணிவோடு களமிறங்கிய படக்குழு.. SKY DIVING மூலம் வேற லெவலில் விளம்பரம் ! VIDEO

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ஒரு கலக்கு கலக்கி வருகிறது. முன்னதாக லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவான எந்திரன் 2.O படத்திற்கும் இதேபோல் வானத்தில் பலூன் பறக்கவிட்டு ப்ரோமோஷன் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories