சினிமா

இந்தியாவிலேயே அதிக டிக்கெட் விற்பனையான திரைப்படங்கள் பட்டியலை வெளியிட்ட BookMyShow - டாப் 5 படங்கள் எவை ?

இந்தியாவிலேயே அதிக டிக்கெட் விற்பனையான திரைப்படங்கள் பட்டியலை வெளியிட்ட BookMyShow - டாப் 5 படங்கள் எவை ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒவ்வொரு ஆண்டும் முடியும் போது, அந்தாண்டில் சிறப்பு படைப்புகள் பட்டியல் வெளியிடப்படும். அப்படி முதலில் இருப்பது முடியப்போகும் அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர்கள், நடிகைகள், படங்கள், இயக்குநர்கள் என திரை சார்ந்து இருப்பதே ஏராளம்.

அந்த வகையில், இந்தாண்டு (2022) முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், உலகளவில் 2022-ல் Google ல் அதிகம் தேடப்பட்ட தமிழ் படங்கள், பிரபலங்கள், இந்திய படங்கள், பிரபலங்கள், ஆசியாவை சேர்ந்த பிரபலங்கள், imdb-ல் இடம்பிடித்த திரைப்படங்கள், பிரபலங்கள் என அதிகமான பட்டியல்கள் வெளியாகி வருகிறது.

இந்தியாவிலேயே அதிக டிக்கெட் விற்பனையான திரைப்படங்கள் பட்டியலை வெளியிட்ட BookMyShow - டாப் 5 படங்கள் எவை ?

இந்த நிலையில் தற்போது BookMyShow-ல் அதிகம் புக் செய்யப்பட்ட இந்திய படங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் 2 022 ஆம் ஆண்டிற்கான BookMyShow இன் சமீபத்திய அறிக்கையின்படி, தென்னிந்திய மொழி படங்களான KGF 2, RRR, காந்தாரா மற்றும் பொன்னியின் செல்வன் 1, இந்த ஆண்டின் சிறந்த பிளாக்பஸ்டர் ரேங்க்கில் இருக்கிறது.

பாலிவுட்டில் பிரம்மாஸ்திரா, பூல் புலையா 2, த்ரிஷ்யம் 2 மற்றும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே அதிக டிக்கெட் விற்பனையான திரைப்படங்கள் பட்டியலை வெளியிட்ட BookMyShow - டாப் 5 படங்கள் எவை ?

2022 ஜனவரி 1 முதல் டிசம்பர் 5 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. கோவிட்- இடையூறுக்குப் பிறகு தொழில்துறை மீண்டு வருவதால், 8 மில்லியன் மக்கள் நேரடி பொழுதுபோக்கு அனுபவங்களுக்காக வெளியே வந்திருக்கிறார்கள்.. இந்த ஆண்டில் 19,000 On-ground நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது Bookmyshow.

உண்மையில், இந்நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று சினிமா மட்டுமல்லாது கலவையான ஈவண்ட்களினால் அனைத்து வகைகளிலும் 2.14 மில்லியன் டிக்கெட்டுகளை விற்றிருக்கிறது. ஆக பொழுதுபோக்குத்துறை முன்னைக்காட்டிலும் 59% வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக டிக்கெட் விற்பனையான திரைப்படங்கள் பட்டியலை வெளியிட்ட BookMyShow - டாப் 5 படங்கள் எவை ?

அதிக விற்பனையான திரைப்பட டிக்கெட்டுகளின் பட்டியலில் KGF 2, RRR, கமல்ஹாசன் நடித்த விக்ரம், பொன்னியின் செல்வன் 1 மற்றும் பிரம்மாஸ்திரா இடம்பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து கூடுதலாக, காந்தாரா, கார்த்திகேயா 2, தி காஷ்மீர் ஃபைல்ஸ், சீதா ராமம் மற்றும் 777 சார்லி உள்ளிட்ட சில சிறிய படங்கள் கூட எதிர்பார்ப்புகளை மீறியிருக்கிறது.

உண்மையில், இந்த ஐந்தாண்டு முன்பதிவுகளின் அடிப்படையில் பாகுபலி 2-வை எல்லாம் பின்னுக்குத்தள்ளி முன்னனியில் இருந்தது. KGF 2 மற்றும் RRR. ஒட்டுமொத்த டிக்கெட்டுகள் விற்பனையில் 34% இந்த படங்கள்தான் எடுத்துக்கொண்டிருக்கிறது.

இந்தியாவிலேயே அதிக டிக்கெட் விற்பனையான திரைப்படங்கள் பட்டியலை வெளியிட்ட BookMyShow - டாப் 5 படங்கள் எவை ?

BookMyShow இல் மொத்தம் 17.7 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருக்கிறது. அதில் 14 ஏப்ரல் 2022 அன்று ஒரே நாளில் 2.14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருக்கிறது. அதில் KGF தான் நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக, சுமார் 40% திரைப்பட ஆர்வலர்கள் இந்த ஆண்டு வார நாட்களில் மாலைக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். திரைப்படங்களுக்காக அதிக ட்ரான்செக்‌ஷன் செய்த நகரங்களில் மும்பை, டெல்லி என்சிஆர், பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, புனே, கொச்சி மற்றும் விசாகப்பட்டினம் ஆகியவை இருக்கிறது.

இந்தியாவிலேயே அதிக டிக்கெட் விற்பனையான திரைப்படங்கள் பட்டியலை வெளியிட்ட BookMyShow - டாப் 5 படங்கள் எவை ?

அகமதாபாத், திருச்சி, திருவனந்தபுரம், மதுரை, திருப்பதி, விஜயவாடா, புவனேஷ்வர், மைசூரு மற்றும் லக்னோ உள்ளிட்ட மெட்ரோ அல்லாத நகரங்கள் கூட திரைப்படங்களில் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறது. பெரிய வடிவிலான திரையரங்குகள் மற்றும் பிரீமியம் அனுபவங்கள் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கிறது. வழக்கமான திரையரங்குகளை விட 116% திரைப்பட ஆர்வலர்கள் 3D, IMAX 2D, IMAX 3D, 4DX தியேட்டர்களை தேர்ந்தெடுத்து படம் பார்த்திருக்கிறார்கள்.

பே-பெர்-வியூ ஸ்ட்ரீமிங் தளங்களில் BookMyShow ஸ்ட்ரீம் 1,11,000 மணிநேர பார்வையைப் பதிவுசெய்திருக்கிறது..200 திரைப்படங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களில் அசாசின்ஸ், ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் மற்றும் தி ஸ்பேஸ் வாக்கர் உள்ளது. ஆக, திரைப்பட ஒளிபரப்பு துறை அதிவேக வளர்ச்சியில் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories