சினிமா

பிரபல கன்னட நடிகர் மீது செருப்பு வீசிய ரசிகர்.. பாடல் வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?

பாடல் வெளியீட்டு விழாவின் போது கன்னட நடிகர் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் மீது செருப்பு வீசிய ரசிகர்.. பாடல் வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர் 'கிராந்தி' என்ற படத்தில் தடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதேபோல் நடிகர் தர்ஷனின் ரசிகர்களும் திரண்டு இருந்தனர்.

அப்போது திடீரென கூட்டத்தில் இருந்து ஒருவர் நடிகர் தர்ஷன்மீது செருப்பை வீசினார். அந்த செருப்பு தர்ஷனின் தோள் பட்டையில் பட்டு கீழே விழுந்தது. இதைப்பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து மீண்டும் நிகழ்ச்சி தடை எதுவும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. இந்த சம்பவத்திற்குக் கன்னட திரை உலகில் உள்ள முன்னணி நடிகர் நடிகைகள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

பிரபல கன்னட நடிகர் மீது செருப்பு வீசிய ரசிகர்.. பாடல் வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன?

மேலும் செருப்பு வீசிய நபர் நடிகர் புனித் ராஜ்குமாரின் ரசிகர் என்பதும் சில நாட்களுக்கு முன்பு நடிகர் தர்ஷன் அதிர்ஷ்ட தேவதை குறித்து தவறாகப் பேசியதால் அதற்கு எதிர்வினையாகவும் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories