சினிமா

“குறுகிய பார்வை..” : பதான் பாடல் சர்ச்சை.. இந்துத்துவ கும்பலுக்கு நடிகர் ஷாருக்கான் கொடுத்த பதிலடி !

பதான் பட பாடலுக்கு இந்துத்துவ கும்பல் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது அவர்களுக்கு நடிகர் ஷாருக்கான் பதிலடி கொடுத்துள்ளார்.

“குறுகிய பார்வை..” : பதான் பாடல் சர்ச்சை.. இந்துத்துவ கும்பலுக்கு நடிகர் ஷாருக்கான் கொடுத்த பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பிரபல பாலிவுட் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம் தான் 'பதான்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படம், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியாகிவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் Besharam Rang என்ற பாடல் வெளியானது. தமிழில் 'அழையா மழை' என்ற பெயரில் இந்த பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இந்த பாடல் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.

“குறுகிய பார்வை..” : பதான் பாடல் சர்ச்சை.. இந்துத்துவ கும்பலுக்கு நடிகர் ஷாருக்கான் கொடுத்த பதிலடி !

இந்த பாடல் முழுவதும் தீபிகா, பிகினி உடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அதோடு அவர் ஆரஞ்சு கலர் துணியில் பிகினி உடை அணிந்துள்ளார். அதனை இந்துத்துவ கும்பல் தங்களது பெருமைக்குரிய காவி உடையை அவமதிக்கும் செயலில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக அமைச்சர்கள், இந்துத்துவ கும்பல் பலரும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து அயோத்தியின் ஹனுமன் காரி மடத்தின் தலைவர் ராஜு தாஸ், "பாலிவுட், ஹாலிவுட் சினிமா துறைகள் தொடர்ந்து சனாதன தர்மத்தை பகடி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்து கடவுளரை அவமதிக்கின்றன.

“குறுகிய பார்வை..” : பதான் பாடல் சர்ச்சை.. இந்துத்துவ கும்பலுக்கு நடிகர் ஷாருக்கான் கொடுத்த பதிலடி !

பதான் படத்தில் தீபிகா படுகோனே அணிந்துள்ள பிகினி உடையின் நிறம் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது. அதுவும் ஷாருக்கான் தொடர்ந்து சனாதன தர்மத்தை எதிர்க்கிறார். காவி நிறத்தில் பிகினி அணிய வேண்டிய அவசியம் தான் என்ன?

வேண்டுமென்றே மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், மக்கள் இப்படத்தை புறக்கணிக்க வேண்டும். இந்தப் படம் எந்தெந்த திரையரங்குகளில் எல்லாம் திரையிடப்படுகிறதோ அவற்றையெல்லாம் தீயிட்டு கொளுத்த வேண்டும். இந்தப் படத்தை எடுத்தவர்களுக்கும் இதே தண்டனை தான் தர வேண்டும்" என்றார்.

அதோடு மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, “காவி உடை வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார். மேலும் வீர சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 'பதான்' படத்தை தடை செய்யும்படி கோஷமிட்டு தீபிகா படுகோனே, ஷாருக்கான் ஆகியோரின் flex-ஐ எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி தொடர்ந்து இந்துத்துவ கும்பல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பதான் பட கதாநாயகன் ஷாருக்கான் கருத்து தெரிவித்துள்ளார். கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் பிற்போக்குத்தனமாக இயங்குகின்றன. மோசமான கருத்துகளை வெளியிடுகிறார்கள். அதில் வரும் எதிர்மறையான கருத்துக்கள் சினிமாவை பாதிக்கிறது. என்னை சுற்றி பல விஷயங்கள் நடக்கின்றன. ஆனாலும் நான் நேர்மறையாகவே இருப்பேன்.

எனக்கு எதிராக வரும் கருத்துகள் என்னை பாதிப்பது இல்லை. சமூக ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட குறுகிய பார்வையிலே இயங்குகிறது" என்றார். இவ்வாறு பேசிய அவர் 'பதான்' படம் என்று குறிப்பிடாமல் பேசியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“குறுகிய பார்வை..” : பதான் பாடல் சர்ச்சை.. இந்துத்துவ கும்பலுக்கு நடிகர் ஷாருக்கான் கொடுத்த பதிலடி !

முன்னதாக பதான் படத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ், "காவி உடை அணிந்து கொண்டு, வெறுப்பு பிரச்சாரம் செய்கின்றனர், சிறுமியை ஒரு சாமியார் பாலியல் வன்கொடுமை செய்கிறார், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்கின்றனர். இதெல்லாம் தவறில்லை, ஆனால் ஒரு படத்தில் நடிகை காவி நிற உடை அணிந்தது மட்டும் தவறா? சும்மா கேட்கிறேன்!" என்று ட்வீட் செய்துள்ளார்.

அதோடு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியிலுள்ள முக்கிய பிரமுகர் Y சதீஷ் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரச்னை நிறத்தில் இல்லை, மாறாக பக்தர்களின் மனநிலையில் உள்ளது" என்று புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“குறுகிய பார்வை..” : பதான் பாடல் சர்ச்சை.. இந்துத்துவ கும்பலுக்கு நடிகர் ஷாருக்கான் கொடுத்த பதிலடி !

மேலும் அரசியல் விமர்சன சூர்யா சேவியர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காவித் துணியை உடுத்தியது, தீபிகா படுகோன். காவித் துணியை அணியச் சொன்னவர், பதான் பட இயக்குனர் சித்தார்த் ஆனந்த், படத்தின் தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ரா.. சங்கிகள் கொளுத்துவது, ஷாருக்கான் உருவ பொம்மையை" என்று குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories