சினிமா

போதையில் கார் ஓட்டிய தமிழ் பட இயக்குநர்.. பறிமுதல் செய்யப்பட்ட கார்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை !

மது போதையில் கார் ஓட்டிச் சென்ற இயக்குநர் கல்யாண் மீது போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்துள்ளது.

போதையில் கார் ஓட்டிய தமிழ் பட இயக்குநர்.. பறிமுதல் செய்யப்பட்ட கார்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் பிரபுதேவா, ஹன்சிகா நடிப்பில் வெளியான 'குலேபகாவலி' படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கல்யாண். அதன்பிறகு நடிகைகள் ஜோதிகா மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான 'ஜாக்பாட்' படத்தையும் இயக்கியுள்ளார். அதன்பின் 'கோஷ்டி', 'ஜல்சா' ஆகிய படங்களை இயக்குநர் கல்யாண் இயக்கி வருகிறார்.

போதையில் கார் ஓட்டிய தமிழ் பட இயக்குநர்.. பறிமுதல் செய்யப்பட்ட கார்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை !

இந்த நிலையில் நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள டி.டி.கே சாலையில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறையினர் இவரது காரை மறித்து சோதனை செய்தனர்.

போதையில் கார் ஓட்டிய தமிழ் பட இயக்குநர்.. பறிமுதல் செய்யப்பட்ட கார்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை !

பின்னர் அவரை சோதனை செய்தபோது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக அவருக்கு அபராதம் விதித்ததோடு, அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட காரை தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சொன்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories